மதுரை, ஜூலை 20- மதுரையில் ஞாயிறன்று மாநில உரிமைகள் சிறப்பு மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறுகிறது. இதை யொட்டி மாவட்டத்தில் மாநாட்டின் நோக்கங்களை வலியுறுத்தி பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. அதனொருபகுதியாக யா.ஒத்தக்கடையில் நடை பெற்ற கூட்டத்திற்கு கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன் தலைமை வகித்தார். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, செ.கண்ணன், ஏ.ராஜேந்தி ரன், ஆர்.மனோகர் ஆகி யோர் பேசினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே. மலர், ஐ.சுப்பரமணி, கிளைச் செயலாளர்கள் ஆர்.வீர சேகரன், எம்.துபாய் பாண்டி, கே.பத்மநாபன் வன்னி, ஜோதிபாசு, சாமிக்கண்ணு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்.ஆலங்குளத்தில் ஒன்றியக் குழு உறுப்பி னர் கே.முருகேசன் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பாலகிருஷ் ணன், எம்.சௌந்தராஜன் (சிஐடியு), செ.ஆஞ்சி (தீ.ஒ.மு.), பாண்டியன், பரமேஸ்வரன் ஆகியோர் பேசினர்.