மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுந்தரராஜபுரம் மாநகராட்சி பள்ளி, பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் 107 மாணவ, மாணவிகளுக்கு என மொத்தம் 438 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார். இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத்தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவணபுவனேஸ்வரி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் நாகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.