districts

img

க.மயிலை ஒன்றியத்தில் 52 பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம்

தேனி ,செப்.16- தேனி மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் முதல்கட்டமாக  க.மயிலாடும்பாறை ஒன்றி யத்தில் 52 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்று  மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார் . க.மயிலாடும்பாறை ஒன்றியம் ,ராஜேந்திரா நகரில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை துவக்கி வைத்து மாணவ -மாணவிகளுடன் உணவருந்திய பின் மாவட்ட ஆட்சியர்  க.வீ.முரளீதரன் செய்தியாளர்க ளிடம் கூறுகையில்,  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தேனி மாவட்டத்திற்குட்பட்ட க.மயிலாடும்பாறை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 51 அரசு ஆரம்பப் பள்ளிகளில் பயிலுகின்ற 1,342 மாணவர்களுக்கும், 1,291 மாணவியர்களுக்கும் என மொத்தம் 2,633 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ளது என்றார்.    இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முக மையின் திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி, மாவட்ட ஊராட்சித்தலைவர் க.பிரிதா, கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எம்.எஸ்.சித்ரா, ஆத்தாங் கரைப்பட்டி ஊராட்சித்தலைவர் பழனிச்சாமி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;