districts

img

வன நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கத் துடிக்கும் பிரதமர் மோடி

தேனி ,செப்.3- வன நிலங்களிலிருந்து மக்களை விரட்டி விட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடி  அரசு தாரை வார்க்க துடிப்பதாக அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். . தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் போடியில் நடைபெற்ற சிறப்பு மாநாட் டில் கலந்து கொண்டு மேலும் பேசியதா வது: வருசநாடு மலைப் பகுதிகளில் விவசாயி களின் உரிமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பாதுகாத்தது என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் .புலிகள் இல்லாத வனத்தில் புலிகள் சரணாலயம் என அறிவித்து விவ சாயிகளை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தர விட்டது. மக்கள் உறுதியாக இருந்தால் தீர்ப்பு தட்டி பறிக்க முடியாது .காலம் காலமாக மேய்ந்து வரும் மாடுகள் எங்கே போய் மேயும்.மக்கள் வாழ்வு அழிந்து விடும் . எனவே வருசநாடு வன விவசாயிகளை அப்பு றப்படுத்தும் விவகாரம் ,மலை மாடுகள் மேய்ச்சல் விவகாரத்தில் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் . தமிழக முதல்வரை சந்தித்து மேல்முறை யீடு  செய்ய வேண்டும் என வலியுறுத்தி னோம். முதல்வரும் ஏற்றுக் கொண்டு அதி காரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் .அதிகாரி கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டில்லி பாபு மூலம் ஆவணங்களை பெற்றுள்ள னர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வர் ,துணை முதல்வர் பொறுப்பில் இருந்த போது இந்த பிரச்சனை களை ஒரு மணி நேரத்தில் தீர்த்து இருக்க லாம். வன உரிமைச் சட்டம் 2006 -ஐ  திருத்தி வன நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு வழங்க ஏதுவாக மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார் .விவசாயிகளுக்கு வங்கி  கடன் கொடுக்க மறுக்கும் மோடி அரசு ,மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் அம்பானி, அதானி  போன்ற முதலாளிகளுக்கு 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளார் . இவ்வாறு அவர் பேசினார். . சிறப்பு மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் தலைமை வகித்தார் .சங்கத்தின் மாநில செயலாளர் டில்லி பாபு ,மாநில துணைத்  தலைவர் டி.ரவீந்திரன் ,அகில இந்திய விவ சாயத்தொழிலாளர் சங்க  மாநிலத் தலைவர்  ஏ.லாசர் ஆகியோர் உரையாற்றினர் .மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டியன் ,மாவட்ட செய லாளர் டி.கண்ணன் ,தாலுகா தலைவர் இ. மூக்கையா ,சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ். செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

தீர்மானம்

மாநாட்டில் மேகமலை வன விவசாயி கள், மலை மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு  தடை விதித்த மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் .நீண்ட காலமாக குடியிருந்து விவசாயம் செய்து வரும் 90 கிராமங்களு க்கு வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும்.சூலப்புரம் ,ராமகிருஷ்ணாபுரம் பகுதிக்கு வகை மாற்றம் செய்தும் ,வஞ்சி ஓடை,அரசு புறம்போக்கில் குடியிருப்பவர்க ளுக்கு பட்டா வழங்க கோரி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

;