districts

img

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்திடுக!

விருதுநகர் ஆட்சியரிடம் சிஐடியு மனு அளித்து வலியுறுத்தல்

விருதுநகர், டிச.23- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டியிடம் சிஐடியு-பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப் பட்டது. 8 லட்சம் தொழிலாளர்களிள் வாழ்வாதாரமாக இருப்பது பட்டாசுத் தொழில். தீபாவளி முடிவடைந்து 50 நாட்கள் ஆகிய நிலையில், 90 சத வீத பட்டாசு ஆலைகள் திறக்கப்பட வில்லை. இதனால், அப்பணியில் ஈடு பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதா ரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது.  எனவே, உடனடியாக ஆலை களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிஐடியு சார்பில் கோரிக்கை மனுவை மாவட்ட செய லாளர் பி.என்.தேவா, பட்டாசு தீப் பெட்டி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.முருகன், மாவட்ட பொருளாளர் எம்.சி.பாண்டியன், சிபிஎம் சிவகாசி நகர் செயலாளர் ஆர். சுரேஷ்குமார், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத் ஆகி யோர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி யைச் சுற்றி 1070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் நேரடியாகவும், சார்பு தொழில்கள் மூலமாக மறைமுகமாக வும் 8 லட்சம் பேர் வேலை செய்து வரு கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூக, பொரு ளாதார வளர்ச்சி பட்டாசு தொழிலை யே நம்பியுள்ளது. இங்கு இத்தொழிலை விட்டால் இத்தனை பேருக்கும் மாற்று வேலை கொடுப்பதற்கான அரசு மற்றும் தனி யார் சார்ந்து வேறு எந்த வகையான தொழில் நிறுவனங்களும் இல்லை. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்வதற்கு சாதகமான சீதோஷ்ண நிலை மற்றும் போது மான மழையளவும் இல்லை என்பது தாங்கள் அறிந்ததே. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு சுற்றுச்சூழல் மாசு பிரச்சனை யை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு படுவதாகச் கூறி தனியார் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் பட்டாசை தடை செய்ய வேண்டும் என தனிநபர் மனுதாக்கல் செய்துள் ளார்.

மேற்படி வழக்கில் உச்சநீதிமன் றம் கடந்த 2018ல் சரவெடி தயா ரிப்பு மற்றும் விற்பனையை தடை செய்தும், பேரியம் நைட்ரேட் வேதி பொருளை பட்டாசு தயாரிப்பில் பயன் படுத்துவதை தடை செய்தும் இடைக் கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் மத்திய பெட்ரோலியம் மற் றும் வெடிபொருள் பாதுகாப்பு நிறு வனம் சார்பில் மேற்கண்ட சரவெடி மற்றும் பேரியம் நைட்ரேட் இல்லாமல் 40 சதம் பட்டாசு உற்பத்தியே சாத்தி யம் என்றும், இதில் சோர்ஷா, ராக் கெட், குருவி, லட்சுமி வெடி உள்ளிட் டவை மட்டுமே தயார் செய்ய முடி யும் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை நீதி மன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேற்படி வழக்கில் (சிஐடியு) விருதுநகர் மாவட்ட பட்டாசு, தீப் பெட்டி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நாங்களும் இணைந்துள் ளோம்.

மனுதாரர்கள் பேரியம் நைட்ரேட் தொடர்பாக தனியார் ஆய்வக அறிக் கையின் அடிப்படையில் மனுதாக்கல் செய்து அதனடிப்படையில் உச்சநீதி மன்றத்தில் பேரியம் நைட்ரேட் தொடர் பாக இடைக்கால உத்தரவினை பெற் றுள்ள நிலையில் டஉநஞ பேரியம் நைட்ரேட் தொடர்பாக அரசு மற்றும் அரசு சார்ந்த ஆய்வு நிறுவனங்களின் ஆய்வறிக்கையை பெற்று அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் முறையான உச்சநீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்து அதன் மூலம் மேற்படி உச்சநீதிமன்ற மனு வினை பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக முடிவுக்கு கொண்டு வர பூர்வாங்க நட வடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால், துணை முதன்மை அதி காரி, நடைமுறையில் சாத்தியமில் லாத விசயங்களை அமல்படுத்தும் நோக்கில் எடுத்து வரும் நடவடிக்கை கள் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மூடிக் கிடக் கிறது. இதனால் லட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்கள் வேலை யில்லாமல் வறுமையில் வாடுகின்ற னர்.

உச்சநீதிமன்றமானது, மேற்படி மனு விசாரணையில் பட்டாசுக்கு முழு மையான தடையில்லை என்று வெளிப்படையாக தெரிவித்த பின் பும், இவ்விசயத்தில் பட்டாசு தொழி லாளர்களுக்கு மாற்று ஏற்பாடினை அரசோ, மனுதாக்கல் செய்த பொது நல அமைப்போ செய்ய முடியாது என்ற நிலையில் தற்போதுள்ள பட்டாசு தயாரிப்பு பணிகள் கடந்த கால நிலையிலேயே தொடர்ந்து நடை பெறுவதற்கு தக்க நடவடிக்கை யினை தாங்கள் எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறோம். மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடந்த 24.12.2018 அன்று அனைத்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் சார்பு செய்து அந்த நேரத்தில் பட்டாசு தொழிற்சாலைகளை திறப்பதற்கு அறிவுறுத்தினார். அதன் அடிப்படை யில் அன்றைக்கு பட்டாசு ஆலை கள் திறக்கப்பட்டது. தற்போதும் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவை காரணம் காட்டி அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக பட்டாசு தொழிற்சாலைகள் திறக்கப்படாமல் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். எனவே, ஏற்கெனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட சுற்ற றிக்கை போன்று புதிய சுற்றறிக்கை யினை பட்டாசு தொழிற்சாலைகளை திறப்பதற்கான அறிவுறுத்தலுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடி யாக வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;