districts

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள்

மதுரை, டிச.22- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வண்டி எண் 06001 தாம்பரம் - திரு நெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் 2022 ஜனவரி 12 அன்று தாம்பரத்திலிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.  மறுமார்க்கத்தில் வண்டி எண் 06002 திருநெல்வேலி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 13 அன்று திரு நெல்வேலியிலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.  இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்பு ரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  வண்டி எண் 06005 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து ஜனவரி 13 அன்று மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.  

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06006 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் அதி விரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 14 அன்று மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.  இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண் டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில் பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலை யங்களில் நின்று செல்லும். நாகர்கோவில் - சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில் (06006) மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.  வண்டி எண் 06004 நாகர்கோவில் - தாம்ப ரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 16 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.  

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06003 தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 17 அன்று தாம்பரத்திலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.  இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்பு ரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில் பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  வண்டி எண் 06040 திருநெல்வேலி - தாம்ப ரம் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 16 அன்று இரவு 7 மணிக்கு புறப்பட்டு அம்பாசமுத்திரம், தென்காசி, இராஜபாளை யம் வழியாக சென்று, மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.  மறுமார்க்கத்தில் வண்டி எண் 06039 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜன வரி 17 அன்று காலை 10.45 மணிக்கு தாம்ப ரத்தில் இருந்து புறப்பட்டு விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் வழியாக சென்று இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

;