விருதுநகர், ஏப்.17- விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளை யார்குளம் ஊராட்சியில் தலித் மக்கள் வசித்து வரும் குடியிருப்புகள், அரசுக்கு சொந்தமான கட்டிடங்களை இடிக்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதைத் தடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலு லவகத்தில் திங்களன்று மனு அளிக்கப் பட்டது. கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.சசிக்குமார் அளித்துள்ள மனுவில் “பிள் ளையார்குளம் ஊராட்சியில் உள்ள 949-2,ஏ-1 ஊரணிக்கரையாகும். இதில் வீடற்ற அருந்ததியர் மக்கள் குடியிருப்புகள் கட்டி யுள்ளனர். அரசுக்குச் சொந்தமான நூல கம், நீர்த்தேக்கத் தொட்டி, கோவில்கள், அன்னதானக் கூடம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் சிறுகடை கள் ஆகியவை பல ஆண்டுகளாக உள்ளன. இந்த நிலையில் அவை ஆக்கிரமிப்பு களில் உள்ளதாகவும் அவற்றை அகற்ற வேண்டுமெனவும் ஊராட்சி நிர்வாகம் அறி விப்பு வெளியிட்டுள்ளது. இதனால், ஏராள மானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவிற்குத் தடை விதிக்க வேண்டும். அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டு”மெனக் குறிப்பிடப்பட் டுள்ளது.