districts

img

60 ஆண்டுகளாக குடியிருக்கும் அவனியாபுரம் பட்டியலின மக்களுக்கு மாற்று இடம் வழங்குக

மதுரை, டிச.17-  மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 60வது  வார்டு அவனியாபுரம் பகுதியில் செம்பூரணி சாலையில் கடந்த 60 ஆண்டுகளாக பட்டியல் இன மக்கள் வீடு கட்டி குடியிருந்து வரு கின்றனர்.  இந்நிலையில், இவர்கள் இவ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி உடனடி யாக 7 நாட்களில் காலி செய்ய வேண்டும் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளது.   இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவனியாபுரம் தாலுகாச் செயலாளர் தனபாலன், தாலுகா குழு உறுப்பி னர் வி.கருப்பசாமி ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.   இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து புதிய பொருத்தமான வீடுடன் கூடிய இடமும் வழங்கி பாது காத்திட வேண்டுமென அந்த பகுதியை சேர்ந்த மக்கள்  50-க்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகளுடன் வந்து மனு அளித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி. இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி ஆகியோரும் பங்கேற்றனர்.   மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மனு மீது உரிய நட வடிக்கை எடுப்பதாகவும், நரிகுறவர் மற்றும் விளிம்பு நிலை மக்கள் மேம்பாட்டு சிறப்பு திட்டத்தின் கீழ் மனுதாரர்களுக்கு வீடுடன் கூடிய இடங்கள் வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

;