districts

img

நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் போராட்டம்

விருதுநகர், செப்.20- நிலுவையில் உள்ள அக விலைப்படியை உடனடி யாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத் தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் தொகைக்காக பிடித்தம் செய்யும் தொகையை ரூ. 350 ஆக்குதல் வேண்டும். 70வயது கடந்த  ஓய்வூதிய ருக்கு கூடுதலாக 10சதவீத ஓய்வூதியம் வழங்க வேண் டும். ஒன்றிய அரசானது, ஓய் வூதியருக்கு ரயில் பயணங்க ளில் வழங்கிய சலுகை கட்ட ணத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்ட கரு வூல அலுவலகம் முன்பு  நடைபெற்ற இப்போராட்டத் திற்கு மாவட்ட துணைத் தலைவர் திருவண்ணா மலை தலைமை தாங்கினார். துவக்கி வைத்து ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவடட செய லாளர் சீனிவாசன் பேசி னார்.

கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் எஸ்.ராமசுப்புராஜ், வங்கி ஓய்வூதியர் நல அமைப்பின் சி.மாரிக்கனி, ஏஐபிடிபிஏ மாநில துணைத் தலைவர் எம்.பெருமாள் சாமி ஆகியோர் பேசினர். நிறைவு செய்து பொதுத் துறை ஓய்வூதியர் அமைப்பு களின் மாவட்டத் தலைவர் டி.சந்திரராஜன் பேசினார். முடிவில் வட்டக்கிளைத் தலைவர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

தேனி 

தேனி ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட  தலைவர் கே.துரை ராஜ் தலைமை வகித்தார்.அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் தாஜுதீன் தொடக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் எ.பி.முருகேசன் பேசினார். போ ராட்டத்தை ஆதரித்து ஓய்வு பெற்றோர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சி.பா.ஆண்டவர், போக்குவரத்து ஓய்வு சங்க மண்டல துணை பொதுச்செயலாளர் எம்.பாலையா, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.கனகராஜன் ,பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் டி.கே.சீனிவாசன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் சிவ மணி நன்றி கூறினார்.

மதுரை 

மதுரை மாவட்ட ஆட்சிய ரகம் அருகே உள்ள திரு வள்ளுவர் சிலை அருகில் செவ்வாயன்று மாவட்டத் தலைவர் முனைவர் சு . கிருஷ்ணன் தலைமையில் மாபெரும் தர்ணா போராட் டம் நடைபெற்றது  மாவட்டச் செயலாளர் அ. பால்முருகன்  விளக்கிப் பேசினார். மாநில பொருளாளர் என். ஜெயச்சந்திரன்  சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட பொரு ளாளர் ஆர். தேவராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர்  க. நீதிராஜா, டிஎன்ஆர்டிபிஏ கௌரவத் தலைவர்  மு. பரமேஸ்வரன்,  நெடுஞ் சாலைத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.டி.எஸ். திருவேங்கட ராஜ் ஆகியோர் ஆத ரித்துப் பேசினர். மாவட்ட பொருளாளர் என். ஜெயரா மன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

;