districts

img

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், செப். 29 போக்குவரத்து தொழிலாளர் கள் ஓய்வு பெறும் தினத்திலேயே பணப் பலன்களை வழங்கிட கேட்டும், நீதிமன்ற உத்தரவுபடி ஓய்வு பெற்றோருக்கு அக விலைப்படியை வழங்க கோரி யும், 2020 மே முதல் இறந்து போன  விருப்ப ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையினை வழங்க கேட்டும்,விரைவு கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் சிஐடியு மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடை பெற்றது. நாகர்கோவில் விரைவு போக்கு வரத்து கழக மீனாட்சிபுரம் பணி மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் ்டத்திற்கு மாநில உதவி தலைவர் ஜான் ராஜன் தலைமை தாங்கி னார். பணிமனை சிஐடியு தலைவர் சிவசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் கிருஷ்ண தாஸ்,பொன்.சோபனராஜ் சிஐ.டியு தலைவர் பகவதியப்பன், பொன் குமார் ஆகியோர் பேசினர். விரைவு கழக கன்னியாகுமரி பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனைத் தலைவர் தங்கப்பன் தலைமை தாங்கினார். சிஐடியு மத்திய சங்க நிர்வாகி செர்கான், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் உத வித்தலைவர் வின்சென்ட் பேசினர். மார்த்தாண்டம் விரைவு கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்ற நல அமைப்பின் கிளைத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் டென்னிஸ் ஆண்டனி, பெருமாள், சசாங்கன் ஆகியோர் பேசினர். இதில்  எராள மான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

;