சின்னாளப்பட்டி, டிச.18- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே செங்கட்டான்பட்டியில் அரசினர் நடு நிலைப்பள்ளியில் மாணவிகளை கழி வறைகளை சுத்தம் செய்யச் சொல்லி பள்ளி யின் தலைமை ஆசிரியை சுகுமாரி மாணவி களை வற்புறுத்தியதால் ஒருவாரகாலமாக மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்து வந்ததாக மாணவிகள்பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதில் ஒவ்வாமை ஏற்பட்டு மாணவி கள் உணவருந்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஒரு மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு வத்த லக்குண்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பள்ளியில் பணியாற்றும் மற்றொரு ஆசிரியரான ஸ்டீபன் என்பவர் அவர் கொண்டுவரும் உணவுப் பாத்தி ரங்களை சாப்பிட்ட பின்பு கழுவச்சொல்லி வற்புறுத்துவதாகவும் மறுத்தால் மிரட்டு வதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து பெற்றோர்கள் பள்ளி யை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் காத்தி ருப்புப் போராட்டமாக மாறியுள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். பணிநீக்கம் செய்திடுக! இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டி.செல்வமுருகன், மாவட்ட செயலாளர் ஏ.கே.முகேஷ் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களை முறையாக பணியமர்த்திட வேண்டும். மாண வர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமையாசிரியரையும், டிபன் பாக்ஸை சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரியரையும் பணி நீக்கம் செய்திட வேண்டும். இதுபோன்ற, சம்பவங்களை தடுப்பதற்கு மாவட்ட கல்வித் துறையும் உறு தியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.