தேனி, ஜன.5- மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு பாளை யம் கல்லூரி மாணவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் . கரூரில் பிரதர்ஸ் ஸ்பீடு ஸ்கேட்டிங் கழகம் சார்பில் மாநில ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதி தேர்வு நடை பெற்றது. இதில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி வங்கியியல் முத லாம் ஆண்டு மாணவர் பி.விமல் கலந்து கொண்டார்.17 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் பங்கேற்ற இவர் 300 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டத்தில் முதலிடத்தையும், 1000 மீட்டர் ரிங் போட்டிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்து பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வென்றார். இதனைத் தொடர்ந்து மாநில அளவில் நடை பெறக்கூடிய ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். வெற்றி பெற்ற மாணவனை கல்லுாரித் தாளாளர் எம்.தர்வேஷ் முகைதீன், மேலாண்மை குழு தலைவர் எஸ்.செந்தால்மீரான், முதல்வர் முகமது மீரான், உடற்கல்வி இயக்குநர் பி.அக்பர் அலி உள்ளிட்டோர் பாராட்டினர்.