பழனி,ஜூன் 8- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தி னால் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் பழனியில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி இரண்டாவது பரிசை வென்றது. கல்லூரி மாணவர்கள், பள்ளி மாண வர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு பிளாஸ்டிக்கை ஒழித்து மாற்றாக மஞ் சப்பை உபயோகப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக மரங்களை நடுவது மற்றும் மண்வளம் காக்க சீமைகருவேல் மரங்களை அகற்று தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்த தற்காகவும் விருது வழங்கப்பட்டது. தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் விருதை வழங்கி னார். இந்து சமய அறநிலைத்துறை கூடு தல் ஆணையர் ஹரிப்பிரியா, இணை ஆணையர் இ.ரா.பிரகாஷ், பழனி தண்டா யுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன், கல்லூரி முதல்வர் முனைவர் புவனேஸ்வரி ஆகியோ ரால் இந்த விருது பெற்றுக் கொள்ளப் பட்டது.