கொரோனா தொற்று உலகையே முடக்கிப்போட்டது. மனிதகுல மருத்துவ விஞ்ஞானிகளின் தீவிர முயற்சி யால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, உலகம் சற்று மீண்டு வருகிறது. பண்டிகை களும் திருவிழாக்களும் சோர்ந்து போயிருக்கும் மக்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். உழைத்துக் களைத்த மக்களுக்கு இளைப்பாறும் இடமாக பண்டிகைகள் உள்ளன. ஒட்டுமொத்த தமிழர்களின் திரு நாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. வெறும் பண்டிகை மட்டும் கொண்டாடப்படுவ தில்லை. தமிழர்களின் பாரம்பரிய விளை யாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வை தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழர்களின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளாத, உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒன்றிய அரசால் ஜல்லிக்கட்டுக்கு வந்த தடையை தமிழக மக்கள் திரண்டு எழுந்து போராடி, ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். தமிழக மக்களும் ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆவ லோடு எதிர்பார்த்துள்ள ஜல்லிக்கட்டை கட்டுப் பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனு மதியளித்துள்ளது. இச்செய்தி தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
கொரோனா தொற்று பரவலால் கட்டுப்பாடு களுடன் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அரசு நடத்த முன்வந்துள்ளது பாராட்டுக்குரி யது; வரவேற்கத்தக்கது. ஜல்லிக்கட்டு போட்டி யில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிந்து பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். சில ஊர்களில் பார்வையாளர்கள் அமர காலரிகள் அமைக்கப்பட்டு நடத்தப்படு கிறது. அப்படியான ஏற்பாடுகளைச் செய்து, நடத்தலாம். அனைத்து காளைகள் மற்றும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு சில நெறிமுறைகளை கொண்டுவந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் காளைகளை பிடிக்க ஆர்வத்துடன் உள்ளனர். ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்பது சில நிமிடங்கள், சில நொடிகள்தான். ஆனால் போட்டிக்காக காளைகளை தயார்ப்படுத்து வது, அதற்கு பயிற்சியளிப்பது பல நாட்கள், மாதங்கள் நடக்கும். போட்டிக்காக அலங்காரம் செய்ய ஆரம்பித்த நாள் முதல் போட்டி முடியும் வரை பெரும்பாலான காளைகள் பழங்கள் சாப்பிடாது; தண்ணீர் கூட குடிக்காது. நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும் அதனை சாப்பிட வைக்க முடியாது. விரதம் பூண்டது போல் போட்டி முடியும் வரை இருக்கும். போட்டி முடிந்த பின்னரே இரையைத் தேடும்; சாப்பிடும். நாட்டு மாடுகளால்தான் இவ்வாறு தாக்குப்பிடிக்க முடியும்.
நாட்டு மாடுகளை வளர்ப்பது அதிகரித்துள் ளது. மதுரை மாநகர் பகுதியில் மட்டும் 850 காளைகளுக்கும் மேல் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் காளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பு ஒரு ஜோடி நாட்டுமாட்டுஇனக்கன்று ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. எழுச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பு ஒரு ஜோடி கன்று ரூ.25 ஆயிரம், ரூ.30 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. நாட்டு மாடு களை வளர்க்க மக்கள் மத்தியில் ஆர்வம் அதி கரித்துள்ளது. சில இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்ற வர்களுக்கு நாட்டுமாடுகளின் கன்றுகளை பரி சாக வழங்கினோம். அந்த கன்றுகள் வளர்க்கப் பட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள் ளது. நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் அதனை வளர்ப்பதும் அதிகரித்துள்ளது.
ஜல்லிக்கட்டில் குழுக்காப்பீடு செய்யப்படு கிறது. பார்வையாளர்களுக்கோ, வாகனங் களுக்கோ சேதம் ஏற்பட்டால் காப்பீடு கிடைக்கும். வீரர்களுக்கு தனியான இன்சூர ன்ஸ் ஏற்கெனவே செய்துவைத்திருந்தோம். ஆபத்தான போட்டிகளுக்கு தனிநபர் இன்சூ ரன்ஸ் செய்யப்படுவதில்லை. ஆனால் ஜல்லிக் கட்டில் தனிநபர் இன்சூரன்சை, உயர்நீதி மன்றத்தில் போராடி வாங்கியுள்ளோம். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 1200 வீரர்களுக்கு அத்தகைய இன்சூரன்சுக்கு விண்ணப்பித்துள்ளோம்.
விடுதலைப்போராட்டத்திற்கு பிறகு, உலகமே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு தமிழகமே ஒன்றுகூடி அகிம்சை முறையில் போராடி, தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மீட்டெடுத்துள்ளோம். அத்தகைய ஜல்லிக்கட்டை பேணிப் பாது காப்போம். அனைவருக்கும் தமிழர் திருநாள், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரி வித்துக்கொள்கிறோம்.
சந்திப்பு:
எஸ்.உத்தண்ட் ராஜ், பா.ரணதிவே.