தூத்துக்குடி, செப். 12 தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் அமைப்பு தினத்தினை முன்னிட்டு சங்க கொடியினை டிஎன்ஆர்டிஒஏ மாவட்ட தலைவர் சொ. மகேந்திர பிரபு ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் டிஎன்ஆர்டிஒஏ மாவட்டச் செயலாளர் லா.அன்றோ, மாவட்டப் பொருளாளர் சுப்பையா, வட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில துணைப் பொது செயலாளர் ந. வெங்கடேசன், வட்ட செயலாளர் தவமணி பீட்டர், மாநில செயற்குழு உறுப்பினர் து.அண்ணாமலை, பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் அன்புசெல்வன் இனிப்புகள் வழங்கினார்.