திருவில்லிபுத்தூர், அக்.7- திருவில்லிபுத்தூர் நக ராட்சிக்குட்பட்ட 33 வது வார்டு பகுதியான கிருஷ் ணன் கோவில் தெருவில் 1500-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வரு கின்றன. பள்ளிக்கூடம், ரயில்வே நிலையம், சர்வோ தயா உள்ளிட்ட அலுவலகங் கள் உள்ளன. கடந்த 20 தினங்களுக்கு முன்பாக ஏர்டெல் செல்போன் நிறுவ னம் ரயில்வே நிலையம் செல்லும் மெயின் ரோட்டில் கங்காதரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் டவர் அமைப்பதற்கான பணி களை துவங்கியுள்ளனர். இதனை எதிர்த்து பொது மக்கள் அந்த இடத்தில் கூடி முற்றுகை உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத் தினர். ஆனால் அதையும் மீறி காவல்துறை பாதுகாப் போடு பணிகளை ஆரம்பித் துள்ளனர். டவர் அமைக்கும் நிறுவனம் விருதுநகர் மாவட்ட ஆட்சியரகத்தில் ‘சி’ பிரிவில் டவர் அமைப் பதற்கு அனுமதி கடிதம் வாங்கி உடனடியாக திரு வில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து நகர திட்ட ஆய்வாளர் சங்க ரேஸ்வரியிடம் கடிதத்தைக் கொடுத்து உடனடியாக பிளான் அப்ரூவல் தருமாறு நெருக்கடி கொடுத்துள்ள னர். அதற்கு அவர், நான் பணியிடமாறுதலில் செல்கி றேன். நீங்கள் கொடுத்த கடிதத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க முடியாது. அரசு விதிமுறைகள் உள்ளன. டவர் அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். இதெல்லாம் செய்து முடித்த பின்னர் ஆணையாளர் ஒப்புதல் பெற வேண்டும். இன்னும் கடிதம் எனக்கு வரவில்லை என்று பதிலளித்துள்ளார்.
இதன்பின்னர் புதிய ஆய்வாளர் ஜான்சிராணி கடிதத்தை பார்த்துவிட்டு மக்களிடம் கருத்து எது வும் கேட்காமல் சம்பந்தப் பட்ட இடத்தையும் பார்வை யிடாமல் பிளான் அப்ரூவ லுக்காக ஆணையாளருக்கு கோப்பு அனுப்பி அவரது ஒப்புதல் வாங்கி டவர் அமைக்கும் நிறுவனத்திற்கு கடிதம் வழங்கியுள்ளார். இதனடிப்படையில் பணியை மேற்கொள்ளும் போது பொதுமக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.பின்னர் வட்டாட்சியர் தலைமையில் வட்டாட்சியர் அலுவல கத்தில் சமாதான கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் 33 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினரும் திமுக நகர செயலாளருமான அய்யாவு பாண்டியன் பேசுகையில், நகராட்சியில் பணிபுரியும் பணி ஆய்வாளர் ஜான்சி ராணி டவர் அமைப்பு சம் பந்தமாக பொது மக்களிடம் கருத்து கேட்கவும் இல்லை.இடத்தை பார்வையிட்டதாக தெரியவில்லை. எப்படி டவர் நிறுவனத்திற்கு அனு மதி வழங்கினீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி நிர்வா கத் தரப்பில் அலுவலர் முறை யான பதில் தரவில்லை.மேலும் கூட்டத்தில் பகுதி மக்களுக்கு ஒருவார கால அவகாசம் வழங்கி அதற் குள் சரியான முடிவை தெரி விக்குமாறு வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் கூறி னார். இந்நிலையில் கிருஷ் ஷ்ணன் கோவில் தெரு, பொதுமக்கள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு அரசு விதிமுறைகளை மீறி திட்ட அனுமதி வழங்கிய நகராட்சி அலுவ லர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டவர் அமைக்கும் அனுமதியை மாவட்ட ஆட்சி யர் ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.