அருமனை, ஜூலை 2- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகேயுள்ள கண்ணாங்கோட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்ணாங்கோடு கிளையின் சார்பில் நூலகம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்புறம் வட்டாரக் குழு உறுப்பினர் ஹென்றி தோமஸ், கிறிஸ்டோ பர், ராஜூ, பாலஸ், புஷ்பம், ஜாண் றோஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.லீமா றோஸ், பாகோடு பேரூராட்சி தலைவர் ஆர்.ஜெயராஜ் ஆகியோர் நூலகத்தை திறந்து வைத்தனர்.