ஒக்கூரில் பொங்கல் விழா
சிவகங்கை, ஜன.18- சிவகங்கையை அடுத்த ஒக்கூரில் மக்களால் ஆறாம் ஆண்டு பொங்கல் விழா ,பரிசளிப்பு மற்றும் நற்சேவை விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் தலைமை வகித்தார், ஒக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் பூமா அருணாச்சலம் முன்னிலை வகித்தார் .பாஸ்கர குருக்கள் வரவேற்றார். சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் சிவகங்கை தொல் நடைக் குழுவின் தலைவருமான நா. சுந்தரராஜன் சிறப்பு ரையாற்றினார். சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவன ரும் ஆசிரியர் பயிற்றுநருமான புலவர் கா. காளிராசா, ஆசிரியர் காந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் இளை ஞர்கள் பெரியோர்கள் அனைவருக்கும் பரிசளிக்கப் பட்டது. முத்து நன்றி கூறினார். ஆசிரியர் நரசிம்மன் நிகழ்ச்சி யை ஒருங்கிணைத்தார்.
அருப்புக்கோட்டை அருகே பைக்குகள் மோதல்: ஒருவர் பலி
அருப்புக்கோட்டை,ஜன.18- அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அருப்புக்கோட்டை அருகே உள்ள மலைப்பட்டி யைச் சேர்ந்தவர் அஜய் கண்ணன் (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை செய்து வந்தார். செவ்வாயன்று இரவு இருசக்கர வாக னத்தில் பாலவநத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். எதிர்திசையில் கடம்பங்குளத்தைச்சேர்ந்த நாகராஜ்(54) என்பவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்துள் ளார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக இரு வாக னங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அஜய் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
செய்களத்தூரில் நெல்கொள்முதல் மையம் அமைத்திடுக! ஆட்சியரிடம் ஊராட்சித் தலைவி கோரிக்கை மனு
சிவகங்கை, ஜன.18- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா செய்க ளத்தூரில் நெல் கொள்முதல் மையம் தொடங்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவி ஜானகி சுப்பிரமணி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்து வலியுறுத்தி யுள்ளார். செய்களத்தூரைச் சுற்றி கிட்டத்தட்ட ஒன்பது கண் மாய்கள் வழியாக பயன்பெறுகிற 5 ஆயிரம் ஏக்கர் உள்ளது. இதில் ஒரு ஏக்கருக்கு 40 மூடை என்று வைத்தாலும் இரண்டு லட்சம் மூடைகள் அறுவடைக்கு வாய்ப்புகள் உள்ளது. கடந்த ஆண்டுகளில் செய்களத்தூரில் நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வந்தது. இந்த ஆண்டும் செயல்பட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளார். கல்லல் ஒன்றியத்தில் கல்லல், கண்டரமாணிக்கம், குன்றக்குடி ஆகிய இடங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை பெறுவதற்கு இந்த மூன்று இடங்களில் உடனடியாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண் டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.
பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா
திருவில்லிபுத்தூர், ஜன.18- திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத பூக்குழி திருவிழா வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு கோவிலில் ஜனவரி 18 அன்று பூக்குழி தேர் திருவிழா நாள்கால் நடும் நிகழ்ச்சி கோவில் செயல் அலுவலர் பு. சத்திய நாராயணன் முன்னிலையில் நடை பெற்றது. நகர்மன்ற தலைவர் ரவிக்கண்ணன், துணை தலைவர் செல்வ மணி மற்றும் உபயதாரர்கள் மண்டக படி தாரர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் முத்துராஜா, செயல் அலுவலர் சத்திய நாராயணன் மற்றும் கோவில் அலுவலர்களும் பணியாளர்களும் செய்திருந்தனர்.