districts

பரமக்குடி நகரில் தரமில்லாத சாலைகள் அமைப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்

இராமநாதபுரம், ஜூலை 2- பரமக்குடி நகரில் தரமில்லாத சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதனை அதிகாரிகள் கண்டுகொள்வ தில்லை. உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் சாலைபோடும் இடங்களில் போராட்டம் நடத்துவோம் என்ற மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித் துள்ளது. பரமக்குடி நகரில் கொல்லம் பட்டரை தெரு, ஆயிரவைசிய மே. பள்ளி, சந்தைபேட்டை, சந்தைகடை தெரு, பாரதி பள்ளி காமராஜர் நகர்,  ஓட்டப்பாலம் முருகன் கோவில் தெரு  உள்பட சில இடங்களில் புதிய தார்ச் சாலை போடப்படுகிறது. ஆனால் எவ்  வித தரமும் இல்லாமலும், பெயரள வில் போடப்பட்டு வருகிறது. இரு சக்கர வாகனத்தை நிறுத்தினால் சற்று நேரத்  தில் ஸ்டாண்ட் போட்ட இடம் பெயர்ந்து கொண்டு வருகிறது. அதேபோல் ஓட்டப்பாலம் முருகன் கோவில் தெரு  சித்த மருத்துவர். பலராமன் வீடு உள்ள  பகுதியில் போடப்படும் சாலையால் வீட்டின் கேட் திறக்கமுடியாத நிலை யில் சாலை போடப்படுகிறது. இது  ஏதோ வேண்டும் என்றே போடப்பட்டது போல் தெரிகிறது. ஒருவேளை சம் பந்தப்பட்ட நபர் சாலை தரமாக போடுங்கள் என சொன்னதால் அவர் வீட்டு கேட்டையே திறக்க முடியாமல் சாலை போடுகிறார்களா? என எண்  ணத் தோன்றுகிறது. சாலைகள் மக்  கள் பயன்பாட்டிற்காகவா, இல்லை மக்களை காவு வாங்கவா என தெரிய வில்லை. கமிசனுக்காக போடப்படும் சாலைகள் எப்படி தரமுள்ளதாக இருக்கும், மக்கள் வரிப்பணம் இவ்  வாறு வீணடிக்கப்படுவதை மார்க்  சிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதிக் காது, ஒப்பந்ததாரர்கள் யாராக இருந்  தாலும் தரமான சாலைகள் போட வேண்டும்  இரண்டொரு நாளில் சாலைகள் மீண்டும் செப்பனிடப்பட்டு தரமாக  போடப்பட வேண்டும், மேலும் போடப்  படும் சாலைகள் வீடுகளுக்கும் பொது மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் போடப்பட வேண்டும்.  பரமக்குடி நகரில் மேற்கண்ட இடங்களை சம்பந்தப்பட்ட அதிகாரி கள் பார்வையிட்டு துரித நடவடிக்கை  எடுத்திட வேண்டும், இல்லையெனில் சாலை போடும் இடங்களில் பொது மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்று கட்சியின் தாலுகா செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

;