districts

img

சிபிஎம் போராட்டத்தால் அடிப்படை வசதிகளை செய்துதர அதிகாரிகள் உறுதி

மதுரை, மே 4-  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மன்னாடி மங்களம் ஊராட்சி அய்யப்பநாயக் கன்பட்டி கிராமம் தேவர் காலனி, விபி நகரில் உள்ள 3 தெருக்களில் சாக்கடை கட்டிதர கோரியும்,  தெருக்களில் பேவர்பிளாக் சாலை அமைத்துத் தர கோரியும்,  மின்விளக்கு, குடி தண்ணீர் வசதி செய்து கொடுத்திட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாடிப்பட்டி ஒன்றியக்குழு சார்பாக தொடர்ச்சியான போராட்டம் நடத்தப்பட்டது.   எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்.  மன்னாடி மங்கலம் ஊராட்சி நிர்வாகத்தை கண்  டித்தும் அடிப்படை வசதிகளை உடனடி யாக செய்துதரக் கோரியும் மே 4 அன்று   அய்யப்பநாயக்கன்பட்டி புதுக்காலனியில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ. வேல்பாண்டி தலைமையில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய் உரையாற்றினார். கட்சித்தலைவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது,  முதல் கட்டமாக 3 தெருக்களுக்கு பேவர்  பிளாக் அமைக்க ரூ.11லட்சம் நிதி  ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதற்கான  வேலைகளை மே 8 அன்று துவங்குவ தாகவும் உத்தரவாதம் அளித்தனர்.