districts

img

ஆட்சியரின் காரை மறித்து மனு கொடுத்த பள்ளி மாணவி

ஆட்சியர் உத்தரவால் வீட்டுக்கு மின்இணைப்பு தரப்பட்டது

திண்டுக்கல், டிச.23- திண்டுக்கல் மாவட்டம் பாளை யம் அருகேயுள்ள கிராமம் கோட்டா நத்தம். இந்த ஊரில் வசிப்பவர்கள் முனியப்பன், காளீஸ்வரி தம்பதி யினர். இவர்களுக்கு இந்திராணி என்ற மகள் உள்ளார். இவர் சேர்வை காரன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி யில் 12 ஆம் வகுப்பு படித்து வரு கிறார். மேலும் இந்திராணிக்கு 3 ஆம் வகுப்பு படிக்கும் பெரியசாமி, 4 ஆம் வகுப்பு படிக்கும் பெரியம்மாள் ஆகிய சகோதர, சகோதரிகளும் உள்ளனர். இவர்களும் சேர்வைகா ரன்பட்டி அரசு பள்ளியில் படிக்கிறார் கள். தந்தை தற்போது கோட்டா நத் தம் ஊராட்சியில் நூறு நாள் வேலைக்கு சென்று வருகிறார். தாய் காளீஸ்வரி வாய்பேச இயலாத மாற்றுத்திற னாளியாக உள்ளார்.  2003 ஆம் ஆண்டு இதே ஊரைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தந்தை முனியப்பன் நான்கரை ஏக்கர் நிலம் வாங்கி அதில் தொகுப்பு வீடு கட்டி யுள்ளார்.

ஆனால் இந்தவீட்டுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் மறுத்து வந்துள்ளனர். முனியப்பன் 6 மாதத்திற்கு ஒரு முறை மின் இணைப்பு கேட்டு தொடர்ந்து திண்டுக்கல் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனுக்கொடுத்து வந்துள்ளார். வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் சிம்னி விளக்கில் இந்தி ராணி படித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு 10ம் வகுப்பு அரசு தேர்வில் சேர்வை காரன்பட்டி மேல்நிலைப்பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ந்தார்.  இந்நிலையில் இந்திராணி குடும்பத்தினர் மற்றும் அவரது உற வினர் தனபால் ஆகியோர் திண்டுக் கல் ஆட்சியரிடம் திங்களன்று மனு நீதி நாளில் மனுக் கொடுக்க வந்தனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வுடன் ஆட்சியரின் காரை மறித்து பள்ளி மாணவி இந்திராணி மனுக் கொடுத்தார். 20 ஆண்டுகளாக மின்சா ரம் இல்லாத வீடாக அவதிப்படு வதாகவும் தொடர்ந்து மனுக் கொடுத் தும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு வழங்காத அவல நிலை நீடிப்பதாக இந்திராணி ஆட்சியரிடம் தெரிவித்தார்.  இதனையடுத்து ஆட்சியர் விசா கன் அதிகாரிகளுக்கு அளித்த உத்த ரவையடுத்து மின்வாரிய அதிகாரி கள் புதனன்று மின்சார இணைப்பு கொடுத்தனர். இதனால் மாணவி இந்திராணியின் குடும்பம் மகிழ்ச்சி யடைந்தனர்.  தமிழக அரசுக்கும், திண்டுக்கல் ஆட்சியர் விசாகனுக்கும், அதிகாரி களுக்கும் மாணவி இந்திராணியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள் ளனர்.                  (ந.நி)

;