districts

img

ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்களை புதுப்பித்து வடிகால் வசதி செய்துதர சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில், டிச. 1- கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட இராஜாக்கமங்கலம் வட்டார பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரை சந்தித்து வெள்ள  நிவாரணம் கேட்டும், ஆக்கிரமிக் கப்பட்ட கால்வாய்களை புதுப்பித்து வடிகால் வசதி செய்து நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் சிபிஎம் தலைமையில் மனு அளித்தனர். பள்ளம் பகுதியில் உள்ள தாமரைக் குளத்திலிருந்து மறுகால் வெள்ளம் கடலுக்கு செல்வதற்காக பயன் படுத்தப்பட்டு வந்த கால்வாயானது பல வருடங்களாக பராமரிப்பின்றி ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்துள்ளது. இக்கால்வாயை புதுப்பித்து பயன்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும், கடந்த ஆறு மாதகாலமாக பெய்துவரும் தொடர் மழையினால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் லூர்துகாலனி, வடக்குதெரு மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும், கழிவறை தொட்டிக ளில் நிரம்பியுள்ள தண்ணீரை வெளி யேற்றி சுத்தம் செய்திட ஊராட்சி மூலம் நடவடிக்கை எடுத்திட வேண்டும், கடந்த ஆறு மாதகால மாக மழை வெள்ளத்தால் வேலை யின்றியும், வருமானமின்றியும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இம் மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் நிவார ணங்கள் தந்து உதவிட நடவடிக்கை எடுத்திட  வேண்டும்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இராஜாக்கமங்கலம் ஊராட்சி க்குட்பட்ட பள்ளம் துறை ஊராட்சி, லூர்து காலனி, வடக்கு தெரு, தர்ம புரம் ஊராட்சி, வத்தக்காவிளை, அண்ணா காலனி புத்தளம் ஊராட்சி க்குட்பட்ட அரியபெருமாள்விளை மேலசங்கரன் குழி ஊராட்சியை சார்ந்த முல்லைத்தோப்பு, புளியடி காலனி, உள்ளிட்ட இடங்களில் வசிக்கும்  மக்களுக்கு இதுவரை எந்தவித நிவாரணப்பொருட்களும் சென்றடையாத நிலையில் அவர்களு க்கு நிவாரணப்பொருட்கள் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைத்து மக்கள் வாழத்தகுந்த இடமாக மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் என் எஸ் கண்ணன், இராஜாக்கமங்கலம் வட்டார செயலாளர் எஸ்.ற்றி ராஜ குமார், வட்டார குழு உறுப்பினர்கள் மிக்கேல் நாயகி, ஆர். குமரேசன், எம். ரகுபதி, பொதுமக்கள் மற்றும் ஏராள மான பாதிக்கப்பட்டோர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோ ரை சந்தித்து வெள்ள நிவாரணம் கேட்டு  மனு அளித்தனர்

;