districts

இராஜபாளையத்தில் குடிநீர் இணைப்பே இல்லாமல் தண்ணீர் வரி கட்டச்சொல்லி நோட்டீஸ்

இராஜபாளையம், அக்.9-  இராஜபாளையம் நகராட்சியில் குடிநீர் இணைப்பே இல்லாத கட்டிடத்திற்கு குடி நீர் வரி கட்டச் சொல்லி நோட்டீஸ் அனுப்  பப்பட்டுள்ளது. இராஜபாளையம் நகராட்சியில் கடந்த  2018 ஆம் ஆண்டு தாமிரபரணி கூட்டுக்குடி நீர் திட்ட பணிகள் துவங்கப்பட்டது. நான்கு  ஆண்டுகள் ஆகியும் இப்பணிகள் நிறைவ டையவில்லை. இந்நிலையில் 2022 ஏப்ரல்  முதல் மாதம் 50 ரூபாயாக இருந்த குடிநீர் கட்டணத்தை  150 ரூபாயாக உயர்த்தி நக ராட்சி தீர்மானம் நிறைவேற்றி, வசூலிக்க ஆரம்பித்தது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, தாமிரபரணி குடிநீருக்கு கட்ட ணம் வசூலிக்க உத்தரவு போட்டுள்ளனர். எனவே நாங்கள் வசூலிக்கிறோம் என கூறி விட்டனர். பொதுமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களிடமும் நகர்மன்ற தலைவரிடமும் புகார் அளித்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எழுத்துப்பூர்வமாக ஆட்சேபணை வழங்கப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு தரப்பினர் ஆட்சேபணைகளை கருத்தில் கொண்டு நகர்மன்ற கூட்டத்தில் குடிநீர் வரியை குறைத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.  இந்நிலையில் வராத தாமிரபரணி தண்ணீருக்கு வரி கேட்டு அனைத்து வீடுக ளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு வரு கிறது. குடிநீர் இணைப்பை பெறாத பல்வேறு கட்டடங்களுக்கும் குடிநீர் வரி விதிக்கப்  பட்டுள்ளது. உதாரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் குடிநீர் இணைப்பு கிடையாது. ஆனால்  குடிநீர் கட்டணமாக ரூ.2280 கட்ட வேண்டும் என நோட்டீஸ் வழங்கியுள்ளனர். வராத தண்ணீருக்கு வரியும் இல்லாத  குடிநீர் இணைப்புக்கு கட்டணம் விதிக்கும்  ராஜபாளையம் நகராட்சியின் இந் நட வடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. தாமரபரணி குடிநீர் வழங்கும் வரை குடிநீர் கட்டணத்தை உயர்த்த கூடாது.இதில்  நகர்மன்றத் தலைவர் உடனடி தலை யீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது.