கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மண்டல பொறியாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், மதுரை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மின்பகிர்மான வட்டங்களில் பணிபுரியக்கூடிய அனைத்து பணியாளர்களும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியினை வரும் டிசம்பர் 7ம் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அலுவலர் மற்றும் பணியாளர்களின் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.