ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.18- ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நிலாச்சோறு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள், பெற்றோர் கள், ஆசிரியர்கள் நிலாச்சோறு உண்டு மகிழ்ந்தனர். மேலும் கவிதைகள், பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தாளாளர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். இயக்குநர் கோபால கிருஷ்ணன், முதல்வர் சுந்தரமகாலிங்கம் உள் ளிட்டோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் முகமது மைதீன், லயன் குணசேகரன், முகமது மைதீன், ஸ்ரீரங்கராஜா, சாத்தப்பன், ரஞ்சித் மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.