சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்துள்ள புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தில், மாடுகள் வளர்ப்பு மற்றும் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி வெள்ளியன்று பார்வையிட்டார். கால்நடைப்பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கக இயக்குநர் அணில்குமார் மற்றும் துறைசார் அலுவலர்கள் உடனிருந்தனர்.