districts

img

கேரள கள் என்கிற முத்திரையுடன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க அமைச்சரவை ஒப்புதல்

திருவனந்தபுரம், ஜுலை 27- கேரளம் முழுவதும் வாய்ப் புள்ள இடங்களைக் கண்டறிந்து தோட்ட அடிப்படையில் கள் உற் பத்தியை ஊக்குவிக்கும் வகையில் விரிவான மதுபானக் கொள்கைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்படும் கள்ளு க்கு கேரள டோடி என்று முத்திரை குத்தப்படும். இது ஒரு தனித்துவ மான இயற்கை மற்றும் பாரம் பரிய மதுபானமாக அறிமுகப் படுத்தப்பட உள்ளது. தென்னையில் இருந்து கிடைக்கும் கள்ளின் அளவு அறிவி யல் பூர்வமாக சரிபார்க்கப்படும். அதிகப்படியான கள் மூலம் வினிகர் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் பணியை குடும்பஸ்ரீ மேற்கொள்ளும். கள் போக்குவரத்தை கண்காணிக்க டிராக் அண்ட் டிரேஸ் முறை செயல்படுத்தப்படும். மாநிலத்தில் கிடைக்கும் பழங்களிலிருந்து (தானியம் அல்லாத) வீரியம் குறைந்த ஆல்கஹால் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். இதற்கு தேவையான சட்டம் இயற்றப்படும். போதைப்பொருள் பயன் பாட்டைக் குறைக்க உதவும் வகையில் விரிவான ஆய்வு நடத்த கலால் துறை அதிகாரிகளுடன் மாணவர்,போலீஸார் நியமிக் கப்பட்டுள்ளதாக கலால் துறை அமைச்சர் எம்பி ராஜேஷ் தெரி வித்தார். பாலக்காட்டுக்கு வெளியே, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தோப்புகளில் கள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். தற்போது ஒரு தென்னையில் இருந்து இரண்டரை லிட்டர் கள் எடுக்க அப்காரி சட்டத்தில் அனுமதி உள்ளது. ஒரு கடையில் கொள் முதல் செய்வதற்கு உரிமம் பெற்ற தென்னை மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே கள்ளை சேமிக்க முடியும். ஆனால் குட்டநாடு போன்ற இடங்களில் சில சமயங்களில் ஐந்து லிட்டர் வரை கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கள் செதுக்குபவர்கள் அனும திக்கப்பட்ட அளவை விட அதிக மாக கிடைத்தால், அடிக்கடி கீழே கொட்டி அழிக்க வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் அளவு மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

 கியூ ஆர் குறியீடு உள்ளீடு இந்த ஆண்டு நிறைவடையும்
அரசின் பிவரேஜ் நிறுவனத்தின் ஊடாக விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களுக்கு கியூ ஆர் குறியீடுகளை இணைக்கும் நடவடிக்கை இந்த வருடத்தில் நிறை வடையும். தற்போது மாநிலத்தில் 559 வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 309 கடைகள் மட்டுமே திறக் கப்பட்டுள்ளன. மீதமுள்ள 250 விற்பனை நிலையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்களை ஏற்றுமதி செய்வதை ஊக்கு விக்கும் வகையில் உயர் பிராண்ட் பதிவு கட்டணம் மற்றும் ஏற்றுமதி கட்டணம் ஆகியவை திருத்தப் படும். வகைப்பாடு புதுப்பிக்கப் படாத ஓட்டல்களுக்கு, வேறு சட்ட ரீதியான தடைகள் இல்லாவிட்டால், வகைப்பாடு குழுவின் சரிபார்ப்பு நிலுவையில் உள்ள பார் உரிமம் புதுப்பிக்கப்படும். வெளிநாட்டு மதுபான விற்பனை அதிகரிப்பு கடந்த ஓராண்டில் கேரளத்தில் வெளிநாட்டு மது விற்பனை 2.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை 67.83 லட்சம் பெட்டிகள் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது பானங்கள் விற்பனை செய்யப் பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் இதுவரை 69.92 லட்சம் பெட்டிக ளாக விற்பனை அதிகரித்துள்ளது. மதுபானங்கள் மீதான வரி உயர்வு உட்பட ரூ.340 கோடி அரசுக்கு கிடைத்தது.