பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழனன்று மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. இதில் சிபிஎம் பழனி நகரச்செயலாளரும் நகரமன்ற துணைத் தலைவருமான கே.கந்தசாமி,பேராசிரியர் மோகனா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பகத்சிங் உட்பட மேல்நிலை/உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.