districts

img

கராத்தே, வாலிபால், கபடி போட்டிகள்: சர்வதேச, தேசிய அளவில் கலசலிங்கம் பல்கலை.வெற்றி

திருவில்லிபுத்தூர், அக்.22- கராத்தே, வாலிபால்,கபடி போட்டிகளில் சர்வதேச, தேசிய  அளவில் கலசலிங்கம் பல்கலைக் கழகம் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. திருவில்லிபுத்தூர் கலச லிங்கம் பல்கலைக்கழக எம்பிஏ மாணவர் ஏ.சுரேந்தர் சேலத்தில் சர்வதேச கராத்தே போட்டியில் மலேசியா,பாகிஸ்தான், பங்களா தேஷை வென்று  முதலிடம் பெற்று, வெற்றிக் கோப்பையும், வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றார். சிஎஸ்சி மாணவி பி.தில்லேஜா கராத்தே போட்டியில் தேசிய அள வில், வெற்றிபெற்று கேப்பையை பெற்றார். நாகர்கோவிலில் தென்மண் டல வாலிபால் போட்டியில் கலச லிங்கம் பல்கலைக்கழக அணி இரண்டாம் இடம் பெற்று கோப்பை யை வென்றது. இராமநாதபுரம் அமெச்சூர் கபடி கழகம் நடத்திய மாநில கபடி  போட்டியில் கலசலிங்கம் அணி முத லிடம் வென்று, வெற்றிகோப்பை யை பெற்றது. சென்னை  முகப்பேர்  எம்ஒய்சி  கபடிக்குழு நடத்திய  போட்டியில், மூன்றாம் பரிசும்,தென்காசியில் தென்மண்டல கபடி போட்டியில் கலசலிங்கம் பல்கலைக்கழக அணி முதல் இடமும் பெற்று வெற்றி பெற்றது. கராத்தே, வாலிபால், கபடி போட்டிகளில் சாதனை புரிந்த மாணவர்களை பல்கலைக்கழக துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த், பதிவாளர் வி.வாசு தேவன்,மாணவர் நல இயக்குநர் முத்துக்கண்ணன், உடற்பயிற்சி இயக்குநர்கள் எஸ்.விஜயலட்சுமி, எம்.சிதம்பரம் ஆகியோர் பாராட்டி னர்.