districts

img

எம்.பி. நிதி ரூ.26 லட்சத்தில் கட்டப்பட்டது: ராஜுக்கள் கல்லூரி புதிய வகுப்பறை கட்டிடத்தை டி.கே.ரங்கராஜன் திறந்து வைத்தார்

இராஜபாளையம், டிச.10-   இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே. ரங்கராஜனின் எம்.பி. நிதி  ரூ .26 லட்சம் மதிப் பீட்டில் புதிய வகுப்பறை கட்டி டம் கட்டப்பட்டது.  இந்த கட்டிடத்தின்  திறப்பு விழா டிசம்பர் 10 வெள்ளியன்று நடைபெற்றது. முன்னாள் மாநி லங்களவை உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான  டி.கே.ரங்கராஜன்,  கல்லூரி தேசிய மாணவர் படையினரின் அணி வகுப்பு மரியாதையை  ஏற்றுக் கொண்டு, புதிய வகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைத்து, சிறப்புரையாற்றினார்.  கல்லூரி ஆட்சி மன்ற குழுத்தலைவர் என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி ராஜா  தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் த.வெங்கடேஸ்வரன் வரவேற்புரையாற்றினார்.  கல்லூரிச் செயலர் முனைவர் எஸ்.சிங்கராஜ்  வாழ்த்துரை வழங்கினார்.  டி.கே.ரங்கராஜன்  தனது உரையில், மாணவர்களின் தனித் திறமைகளை ஆசிரியர்கள் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணைந்து செயல் பட வேண்டும். தொழில், சமூகம், தொழில்நுட்பம், அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றை கல்வி யோடு சேர்த்து மாணவர்களுக்கு  வழங்கி மனப்பாடக் கல்வி முறை குறைக்கப்பட வேண்டும். பணியில் கவனம் மற்றும் பொ றுப்புணர்ச்சி, சமூக சிந்தனை மேலோங்க வேண்டும் என்றார்.   விழாவில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கே. அர்ஜுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. கணேசன் ,நகரச் செயலாளர் பி.மாரியப்பன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்டடத்தை சிறப்பாகக் கட்டிக் கொடுத்த ஒப்பந்ததாரர் குழந் தைவேலுக்கு சால்வைஅணிவித்து கௌரவிக்கப்பட்டது.  துணை முதல்வர் முனைவர் கே.சிவ ராம மூர்த்தி நன்றி கூறினார்.

;