இராமநாதபுரம், டிச.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் தாலுகா குழுவின் தலை யீட்டால் இராமநாதபுரம் - நயினார் கோவில் இடையே காவனூர் பாலத்தில் வைகை தண்ணீர் அதிகளவில் வருவ தால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப் பட்டது. இதனால், மாற்றுப் பாதையில் வெள்ளியன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போர்க்கால அடிப்ப டையில் நடவடிக்கை எடுத்த கோட்ட மேலாளர் மற்றும் கிளை மேலாளர் ஆகி யோருக்கு கட்சியின் சார்பில் நன்றி தெரி விக்கப்பட்டது.