districts

img

பாஜகவின் வெறுப்பு அரசியலை கண்டித்து சிறுபான்மை மக்கள் நலக்குழு போராட்டம்

சிவகாசி, ஜூலை 27- வேற்றுமையில் ஒற் றுமை என்பது இந்தியாவின் நல்ல அம்சமாகும். தற் போது நடைபெற்று வரும்  பாஜக ஆட்சியில் சிறுபான்மை  மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வரு கிறது. இதனால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாஜக நாடு முழு வதும் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியலை ஏற்படுத்தி வருகிறது. இத னைக் கண்டித்தும், மதச் சார்பின்மையை காக்க வேண் டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் கண்டன முழக் கம் நடைபெற்றது. சிவகாசி பாவடித் தோப்  பில் நடைபெற்ற இப்போராட்  டத்திற்கு மாவட்டத் தலை வர் எஸ்.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மரிய டேவிட், மாவட்ட பொருளா ளர் முகமது இஸ்மாயில் ஆகி  யோர் முன்னிலை வகித்த னர். துவக்கி வைத்து மாநில துணைச் செயலாளர் எம். தாமஸ் பேசினார். கோரிக் கைகளை வலியுறுத்தி பெரிய  பள்ளி வாசல் ஆலின் அஹ மதுயாசின், இந்திய யூனி யன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் இப்ராஹிம்ஷா, தேசிய லீக் மாநிலச் செய லாளர் செய்யது ஜஹாங்கீர், தமுமுக மாவட்ட செயலா ளர் அஜ்மீர்கான் ஆகியோர் பேசினர். முடிவில் மாநில பொதுச் செயலாளர் எம். இராமகிருஷ்ணன் கண்டன  உரையாற்றினார். இதில் ஏரா ளமானோர் பங்கேற்றனர்.