districts

img

மக்களுடன் முழுமையான தொடர்பில் இருப்போம்!

மதுரை, செப்.20-  மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மூத்த திமுக  உறுப்பினர்கள் 1,500 பேருக்கு பொற்  கிழி வழங்கும் நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மதுரை மாவட்டம் மேலூரில் நடை பெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது:- நீட் தேர்வை ரத்துச் செய்ய வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து பெறும் நிகழ்ச்சியை ஒரு வாரத்தில் தொடங்க உள்ளோம். நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் கையெழுத்து இயக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க முடியுமா?.  நீட் தேர்வு ரத்து குறித்த ரகசியத்தை என்னிடம் கேளுங்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் எனும் ரகசியத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுவாரா? பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னை பற்றியும், முதல்வர் குறித்தும் பேசி வருகிறார். மோடி ஒன்பதரை ஆண்டுகளில் என்ன செய்துள்ளார் எனத் தெரியவில்லை. சாலை, காப்பீடு என அனைத்திலும் பாஜக அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது. பாஜக அரசால் வாழும் ஒரே குடும்பம் அதானி குடும்பம் மட்டுமே.  தாழ்த்தப்பட்ட சமுதாயம், மற்றும் விதவை என்பதால் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி அழைக்கவில்லை.  தமிழகத்தில் இருந்து பாஜக எனும் பாம்பை  ஒழிக்க வேண்டும் என்றால், அதிமுகவை அகற்ற வேண்டும். 2024-ஆம் ஆண்டு நாடா ளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற திமுகவினர் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றார். விழாவில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன்,  மேலூர் நகர்  மன்றத் தலைவர் முஹமது யாசின் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக் கட்டு மைதானத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். முன்னதாக இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை யில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”* திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை பெறுவதற்கான  வங்கிப் பரிவர்த்தனை அட்டைகளை வழங்கினார்  தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் மின்கம்பம் காலில் விழுந்ததில் பாதிக்கப்பட்ட   விளையாட்டு வீரர் பரிதி  விக்னேஷ்வரனுக்கு ரூ.2 லட்சம்  நிதியை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி னார்.  தொடர்ந்து  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஜப்பான் நாட்டின்  ‘ஜைக்கா’ நிறுவனம் உதவியுடன் அமை யும் புதிய டவர் பிளாக் கட்டிடத்தின் கட்டு மானப் பணிகளை ஆய்வு செய்தார். இந் நிகழ்வுகளில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற  உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், சிறப்புத் திட்டச் செய லாக்கத் துறை அரசு செயலாளர் தாரேஸ்  அஹமது, மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் உடனிருந்தனர்.