districts

img

மழை நீரை அகற்றக்கோரி மறியல்

தூத்துக்குடி,டிச.1 தூத்துக்குடியில் மழை வெள்ளத்தை அகற்ற வலி யுறுத்தி மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் பேச்சுவார்த்தை நடத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, காரணமாக சாலைகள், குடியிருப்பு பகுதிக ளில் வெள்ளம் புகுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம், மருத்துவக் கல்லூரி அரசு மருத் துவமனை, முத்தம்மாள் நகர், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதில் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு, ஏற்பட்டு வரு கிறது. மழை நீர் வடிய வழி யில்லாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் நீரூற்று ஏற் படுவதால் பல இடங்களில் தண்ணீர் வடிவதற்கு வழி யில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டேட் பாங்க் காலனி, ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் எட்டயபுரம் ரோட்டில் திடீர் சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதையடுத்து மத்தியபாகம் காவல் ஆய்வா ளர் ஜெயபிரகாஷ், சிப்காட் உதவி ஆய்வாளர் சங்கர்  மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனி டையே விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த அமைச்சர் கீதா ஜீவன், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும், அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வை யிட்டார். மேலும் மழை வெள்ளத்தை அகற்ற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதை யடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.