விருதுநகர், ஜூலை 2- விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அரசின் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் 404 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் சீனி வாசன்( விருதுநகர்), ரகுராமன்( சாத்தூர்), கோட்டாட்சி யர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.