சிவகங்கை, ஜன.13- சிவகங்கை மாவட்டம் சிராவய லில் ஜனவரி 17 அன்றும் கண்டுபட்டி யில் ஜனவரி 16 அன்றும் மஞ்சு விரட்டு நடத்தப்படுவது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் சிராவயல் கிராமத் தில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் அருகே சிராவய லில் பொங்கல் திருநாளை முன் னிட்டு மஞ்சுவிரட்டு ஜனவரி 17 இல் நடைபெற உள்ளது. இப்பகுதியில் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆகி யோர் நேரடியாக பார்வையிட்டு ,கட்டுப் பாடு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கூறு கையில், சிராவயல் ஜல்லிக்கட்டு 400 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப் பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவுவதை கருத்தில் கொண்டு, வழிகாட்டுதல் நெறிமுறைகள் அரசாணை வெளி யிடப்பட்டு அதன்படி கட்டுப்பாடுகளு டன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடை பெறுகிறது. சிராவயல் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ஆம் தேதி நடைபெறுகிறது. இதற் கான ஏற்பாடுகளை விழா ஒருங்கி ணைப்பாளர்கள் மேற்கொண்டு வரு கிறார்கள். தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.