districts

img

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

மதுரை, ஏப்.1- பால் கொள்முதல் விலை யை உயர்த்தக்கோரி மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை வகித்  தார். அடக்கி வீரணன்,சங்க மாவட்டச் செயலாளர் பி.எஸ்.முத்துப்பாண்டி கிராமத் தலைவர்கள் குமார், சுப்பிரமணி மற்றும் கோட்ட நத்தம்பட்டி குளிரூட்டும் நிலைய தலைவர் கந்தப்  பன், வெள்ளலூர், கோட்ட நத்தம்பட்டி, அம்பலகாரன் பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.  மதுரை மாவட்டம் கரு மாத்தூரில் கறவை மாடுகளு டன் சாலை மறியல் மற்றும்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பி.எஸ்.முத்துப் பாண்டி, மாவட்டத் தலை வர் வெண்மணி சந்திரன், அமைப்பாளர் சாமிநாதன், கருமாத்தூர் பால்பண்ணை தலைவர்கள் வீரராஜன் வேல்முருகன் மற்றும் விவ சாய சங்க தலைவர் குரு சாமி, கிராம பொதுமக்கள் கறவை மாடுகளுடன் கலந்து கொண்டனர். எமக்கலாபுரம் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் எமக்கலாபுரத்தில் பாலை தரையில் கொட்டி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர் சங்கத்தின் ஒன்றிய அமைப்பாளர் சின்னராஜ் தலைமை வகித்தார்.  மாவட்டதுணைச் செயலா ளர் வெள்ளை கண்ணன் மற்  றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.