districts

img

பட்டியலின மக்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

மதுரை, ஜூலை 28-  மதுரை மாவட்டத்தில் மைட்டான்பட்டி, ராயபாளை யம்,  கூடக்கோவில், வீர பட்டி, திருமோகூர்,  கு.வடுக பட்டி, காயம்பட்டி, உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராமங்க ளில் பட்டியலின மக்கள் மீது தொடர் தாக்குதல் நடத் தப்படுவதைக் கண்டித்தும் இதன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வலி யுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக் குழு சார்பில் ஜூலை 28 அன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு   மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.கே.பொன்னுத்தாய் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் துவக்கி வைத்துப் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாநகர் மாவட் டச் செயலாளர் மா.கணேசன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புற நகர் மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி ஆகியோர் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநி லத் தலைவர் த.செல்லக் கண்ணு நிறைவுரையாற்றி னார்.  கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் பா.ரவி எஸ்.பி.இளங்கோவன், வி.உமாமகேஸ்வரன், வி.பி.முருகன், பி.ஜீவானந்தம், மாநகர் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், ஜி.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.