districts

மதுரை முக்கிய செய்திகள்

மாணிக்கம் தாகூர் எம்.பி., பரிந்துரை: 3 பேருக்கு ரூ.2.50 லட்சம் நிவாரணம்

விருதுநகர், ஜூலை 8- விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மக்களவை உறுப்பினர் ப. மாணிக்கம்தாகூர் பரிந்துரைத்தார். அதன்பேரில், பிரதமர்  நிவாரண நிதி ரூ.2.50 லட்சம் கிடைத்தது. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஒன்றியம் ராமலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி ராஜ்குமார். இவர் புற்று நோய் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள 1.50 லட்சமும்,சிவகாசி ஒன்றியம் சாமிநத்தம் ஊராட்சியைச் சேர்ந்த சிறுவன் சரனுக்கு இருதய அறுவைச் சிகிச்சை  மேற்கொள்ள ரூ.50 ஆயிரமும், திருத்தங்கல் பாண்டியன்  நகரைச் சேர்ந்த‌ ஜீவானந்தத்திற்கு இருதய‌ அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.2.5  லட்சம் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்  யப்பட்டது.

சத்துணவு ஊழியர் சங்க மாநாடு

தேனி, ஜூலை 8- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க சின்னமனூர் ஒன்றிய மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது .மாநாட்டை மாவட்ட செயலாளர் பவானி தொடக்கி வைத்தார். மாவட்ட  தலைவர் பி.ரவி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து  வைத்தார் .மாநில துணைத்தலைவர் பெ.பேயத்தேவன் சிறப்புரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஜெயா தலைவராகவும், மணி மாலா செயலாளராகவும், காளி யம்மாள் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

பலசரக்கு குடோனில் தீவிபத்து  

மதுரை, ஜூலை 8- மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் ராஜா. இவர்  மேலூர் செக்கடி பஜார் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி  வருகின்றார்.  இந்நிலையில், கடையில் மேல் மாடியில் உள்ள குடோ னில் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டி களில் தீப்பிடித்து,  குடோன் பகுதிக்கு பரவியது.  இதில்,  குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பி லான பலசரக்குகள் எரிந்து நாசமாகின.  இதுகுறித்து தகவலறிந்த மேலூர் தீயணைப்புத்துறை யினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.  அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் இருக்க மின்  வாரிய ஊழியர்கள் அப்பகுதியில் மின் இணைப்பை துண்  டித்தனர்.  காவல்துறையினர் போக்குவரத்தை மாற்றம் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்து குறித்து மேலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நத்தம் பகுதியில் நாளை மின்தடை

நத்தம், ஜூலை 8-  திண்டுக்கல் மாவட்டம், நத்தம் உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் ஜூலை 10 திங்கள்கிழ மையன்று நடைபெறுகிறது. இதனால் நத்தம், கோவில் பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரி பட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்  பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி  வரை மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும் என  நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்க டேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வருசநாடு அருகே கருங்காலி  மரக்கட்டைகள் கடத்தியவர் கைது

கடமலைக்குண்டு, ஜுலை 8- தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு பகுதியில் இருந்து கருங்காலி மரக்கட்டைகள் கடத்தி வரப்படு வதாக வனத்துறையினருக்கு ரகசிய தக வல் கிடைத்தது.  அதன் பேரில் சனிக்கிழமை காலை  வருசநாடு வனத்துறையினர் தும்மக் குண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடு பட்டனர். மேலும் வருசநாடு அருகே கோமாளிகுடுசு பகுதியில் நின்று வாகன  தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தும்மக்குண்டு பகுதியில் இருந்து வருச நாடு நோக்கி வந்த லாரியை வனத்துறை யினர் நிறுத்த முயன்றனர். ஆனால் வனத்  துறையினரை கண்ட வாகன ஓட்டி வாக னத்தை நிறுத்தாமல் அங்கிருந்து வேக மாக சென்றார். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் லாரியை விரட்டி சென்ற னர். வருசநாடு அருகே லாரியை மடக்கிப்  பிடித்த வனத்துறையினர் வாகன ஓட்டி யை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது லாரியை ஓட்டி வந்தவர்  உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்க னூரை சேர்ந்த பாலமுருகன் (48) என்பது  தெரியவந்தது. மேலும் லாரியில் சோதனை  மேற்கொண்ட போது அதற்குள் 24 கருங்  காலி மரக்கட்டைகள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து லாரியை பறி முதல் செய்த வனத்துறையினர், ஓட்டுநர் பாலமுருகனை கைது செய்தனர். அவரை  விசாரணைக்காக தேனி வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் மரக்கட்டைகள் எங்கி ருந்து கடத்தி வரப்பட்டது? யார் மூலம்  பெறப்பட்டது என்பது குறித்து பாலமுருகனி டம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கிறார்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழையால்  119 அடியாக உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை

தேனி, ஜூலை 8-  நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும்  கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டி யது. தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த  சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து  வருகிறது. குறிப்பாக  இடுக்கி மாவட் டத்தில் பெய்து வரும் கனமழையால் சாலை யில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்  பட்டது. பேரிடர் மீட்பு படையினர் அங்கு  முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு  வருகின்றனர். முல்லை பெரியாறு அணை  நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை  பெய்து வருவதால் நீர்வரத்து சீராக உயர்ந்தது. சனிக்கிழமை காலை நில வரப்படி அணைக்கு 2349 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த  3 நாட்களில் 3 அடி உயர்ந்து 119 அடியாக  உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 356 கனஅடி நீர் வருகிறது. வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான  மூல வைகையாறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல்மழை பெய்து வருகிறது.   இதன் மூலம் வைகை அணைக்கு நீர்வரத்து 140 கனஅடியாக உயர்ந்துள் ளது. அணையிலிருந்து மதுரை மாநகர  குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. நீர் வரத்தும், திறப்பும் இல்லை சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 81.08 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.  மழையளவு  பெரியாறு 19.8, தேக்கடி 15.2, கூட லூர் 1.8, உத்தமபாளையம் 1, போடி 1.8, வீர பாண்டி 3.2, சண்முகாநதி அணை 2 மி.மீ.  மழையளவு பதிவாகி உள்ளது. மூணாறு சாலையில் மண்சரிவு  மூணாறு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து தடை பட்டுள்ளது. கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மூணாறி லிருந்து சின்னக்கானல், பூப்பாறை மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் குஞ்சித் தண்ணி, ராஜாக்காடு திருப்பி விடப்படு கிறது.

இராமநாதபுரம் மக்கள் நீதிமன்றத்தில்  ரூ.76.28 லட்சம் இழப்பீடு வழங்கல்

இராமநாதபுரம், ஜூலை 8-  இராமநாதபுரம் மாவட்டத்தில் நடை பெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 24 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு  இழப்பீடாக 76.28 லட்சத்தை முதன்மை மாவட்ட நீதிபதி கோபிநாத் வழங்கினார். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி மக்கள் நீதிமன்றத்தின் மூலம் வழக்குகள்  எடுத்துக்கொள்ளப்பட்டு இரு தரப்பின ரின் ஒப்புதலுடன் தீர்வு காணப்பட்டு வரு கிறது. இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் மக்  கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற் றது. இதில், முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) பி.சி.கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்ட நிரந்தர மக்கள் நீதி மன்றம் ஆர்.பரணிதரன்,குற்றவியல் நீதித் துறை நடுவர் கே. கவிதா, செயலாளர் சார்பு  நீதிபதி சி.கதிரவன்,மாவட்ட உரிமையியல் நீதிபதி என்.நிலவேஸ்வரன்,நீதித்துறை நடு வர் இ.வெர்ஜின் வெஸ்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சங்க  செயலாளர் கே.என்.கருணாகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இராமநாதபுரம்,இராமேஸ்வரம்,திருவாடானை,பரமக்குடி,முதுகுளத்தூர்,கமுதி, பகுதியில் 8 அமர்களின் 251 வழக்கு கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. 24 வழக்கு கள் தீர்வு கானப்பட்டது.இதில், வழக்காடி களுக்கு 76 லட்சத்து 28 ஆயிரத்து ரூ. 645 இழப்பீடாக வழங்கப்பட்டது.

திருட்டு வழக்கில் மகன்  கைதானதால் தந்தை தற்கொலை

தேனி, ஜூலை 8- தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாத புரம் காந்தாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 45). இவருக்கு வைரமணி என்ற மனைவி யும், கவுதம் என்ற மகனும் தாரணி என்ற மகளும் உள்ள னர். ஆசைத்தம்பி ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுதம் திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இதனால் மன வேதனையில் இருந்த ஆசைத்தம்பி 3 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார்.  இந்நிலை யில் அன்னஞ்சி விலக்கு பகுதியில் ஆட்டோவுக்குள் ஆசைத்தம்பி இறந்து கிடப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது. இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மகன் கைது செய்யப்பட்டதால் மனமுடைந்த  ஆசைத்தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறை யினர்  தெரிவித்தனர்.


 

;