districts

img

உடையும் அபாயத்தில் மானாமதுரை குவளைவேலி கண்மாய்

சிவகங்கை,அக்.21- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா குவளைவேலி கிராமத்தில் உள்ள கண்மாய் உடையும் அபாயத்தில் உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் மது சூதன் ரெட்டி ,மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி ,பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் வெள்ளியன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.  கண்மாய் நிரம்பி உள்ளது. நிரம்பி இருக்கிற தண்ணீர் வெளியேற்றுவதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதற்கு காரணமாக இருப்பது கலுங்கு பகு தியிலிருந்து தண்ணீர் வெளியேறமுடியாத நிலை யில் கலுங்கு அருகே தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளியேறக்கூடிய பகுதி அடைக்கப்பட்டுள்ளது. கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதிகளை தனி நபர்களுக்கு பட்டா கொடுத்ததால் இக் கலுங்கு அருகே பெரிய அளவிற்கு வேலி போட்டு அடைக்கப்பட்டுள்ளது. இத னால் தண்ணீர் வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லாத ஒரு நிலை இருந்து வருகிறது. 800 ஏக்கர் பாசனவசதி பெறுகிற கண்மாய் ஆகும். ஆறு மடைகள் உள்ளன..இதில் இரண்டு மடைகளில் தண்ணீர் வெளியேறாத நிலையில் மடை பழுதாகி உள்ளது. .கடந்த ஆண்டுகளில் இதே போன்ற நிலை ஏற்பட்டது அப்போதெல்லாம் இந்த கலுங்கு வழியா கத்தான் தண்ணீர் திறந்து விடப்பட்டது.  அதனால் இக்கலுங்கு தொடர்பாக மாவட்ட நிர்வா கமும், வட்டாட்சியரகமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம விவசாயிகள் வலியுறுத்தினர். .குவளைவேலி கிராம மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.  பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கிராம மக்கள் உள்ளனர்.

;