districts

img

பெரியகுளம் அருகே சிறுத்தை பலியான சம்பவத்தில் தேனி அதிமுக எம்.பி.யின் மேலாளர்கள் கைது

தேனி, அக்.2- பெரியகுளம் அருகே  சிறுத்தை உயிரி ழந்த விவகாரத்தில் அதிமுக எம்.பி., ரவீந்திர நாத்தின் தோட்ட மேலாளர்கள் இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.  தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அடுத்துள்ள  சொர்க்கம், கோம்பை வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சிறுத்தை ஒன்று வேலியில் சிக்கியிருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அத னடிப்படையில் அங்கு விரைந்த தேனி மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் மகேந்தி ரன் தலைமையிலான வனத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் உதவி வனப்பாதுகாவ லரை தாக்கிய இடத்திற்கு அருகே உள்ள தனியார் தோட்டத்தில் மறுநாளான செப்  டம்பர் 28ஆம் தேதி வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை யினர் அவசர அவசரமாக கால்நடை மருத்து வர்களை வரவழைத்து சிறுத்தையை உடற்  கூராய்வு செய்து அங்கேயே குழி தோண்டி  எரித்துள்ளனர்.

 இதையடுத்து நடைபெற்ற விசாரணை யில், சம்பவ இடமானது அதிமுக தேனி மக்க ளவை உறுப்பினர் ஓ.பி‌.ரவீந்திரதாத்திற்கு சொந்தமானது எனவும், தனது தோட்டத்  தைச் சுற்றி வன விலங்குகள் நடமாட்டத்தை தடுப்பதற்கு சோலார் வேலி அமைத்திருப்ப தும் தெரியவந்தது. அவரது தோட்டத்தில் தற்காலிகமாக கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வந்த இராமநாதபுரம் மாவட் டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற விவசாயி தான், சிறுத்தையின் மர ணத்திற்கு காரணம் எனக் கூறி  வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  ஆனால் சிறுத்தையின் மரணத்தில்  அப்பாவி விவசாயியை வலுக்கட்டாயமாக குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி  அடித்து வனத்துறையினர் துண்புறுத்திய தாகவும், இந்த வழக்கில் தோட்ட உரிமை யாளரான ரவீந்திரநாத் எம்.பி‌ மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாது காப்பு சங்கத்தினர் வலியுறுத்தினர். இத னைத்தொடர்ந்து  மேல் விசாரணை நடத்திய வனத்துறையினர், தற்போது ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்களான பெரிய குளம் தங்கவேல் (42), போடி நாகலாபுரம் ராஜவேல் (28) ஆகிய இருவர் மீதும் வழக்  குப் பதிந்து அவர்களை கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

;