districts

img

மதுரை மாடக்குளம்-கிருதுமால்நதி வரத்துக்கால்வாய் பிரச்சனை: துயரம் நீங்குமா?

மதுரை, மே 13- மதுரை மாடகுளம் கண்மாயிலிருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த கால்வாய் செடி-கொடி கள் வளர்ந்து பல இடங்களில் முட்புதர் களாக காட்சியளிக்கிறது. நல்ல தண்ணீர் செல்ல வேண்டிய இந்தக் கால்வாய் கழிவு நீர் கால்வாயாக மாறிவிட்டது. போதாக் குறைக்கு பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் கால்வாயை ஆக்கிர மித்துள்ளது. மாடகுளம் வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்ற அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடக்குளம்-கிருதுமால் நதி வாய்க்கால்  பாசனக்கால்வாய் என்பதையே அதிகாரி கள் மறந்துவிட்டார்கள் என்கின்றனர் மாடக் குளத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். மாடக்குளம்  வளர்ச்சியடைந்து மதுரை நக ரோடு இணைந்துவிட்டது. இதற்கு உதார ணம் மதுரை புறவழிச்சாலையில் உள்ள துரைச்சாமி நகர் உள்ளிட்ட பல்வேறு குடி யிருப்புகள். மாடக்குளத்தைச் சேர்ந்த சி.ராமகிருஷ்  ணன் கூறுகையில், மாடக்குளம் கண்மாயை ஆழப்படுத்த வேண்டும். வரத்துக்கால் வாய்களை தூர்வார வேண்டும். மாயமாகி யுள்ள கிருதுமால் நதியை கண்டுபிடியுங்கள் என பலமுறை அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்கிறார். மேலும் அவர் கூறுகையில், நீர்வரத்துக் கால்வாயின் மொத்த அகலம் குறைந்துவிட்  டது. கோடைக் காலத்தில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண அதிகாரிகள் முன்வரவேண்டும். தவறினால், மழைக்காலங்களில் மக்கள் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பார்கள் என்றார்.

‘மாடக்குளம் கண்மாயின் கரையோரம் உள்ள சீமை கருவேலம் மரங்களை அகற்ற  வேண்டும். பத்தாண்டுகளாக நீடிக்கும் இப் பிரச்சனையின் மீது மக்கள் அளிக்கப்படும் மனுக்களுக்கு எப்படி தீர்வுகாணப்பட்டது என்பது தான் இன்றுவரை புரியாத புதி ராக உள்ளது.  இப்போது அதிகாரிகள் மாடக்குளம் கண்மாயில் இருந்து கிருத்துமால் ஆற்றுக்கு  தண்ணீர் வந்து சேர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகள் விரை வில் துவங்கும் எனக் கூறுகின்றனர். இப்போ தும் அதிகாரிகள் கூறுவதை நம்பத்தான் வேண்டும் மதுரை மாடக்குளம் கண்மாய் பொதுப்  பணி துறையின் பராமரிப்பில் உள்ளது. சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் 167 மில்லியன் லிட்டர் கொள்ளளவுடன்  மூன்று மதகுகளைக் கொண்டுள்ளது.  

மழை பெய்து நீர் நிரம்பி னால் மக்கள் அச்சமடைவதைத் தவிர வேறு வழியில்லை. மாடக்குளம் கண்மாயிலிருந்து வெளி யேறும் உபரி நீர் அருகாமையில் உள்ள  முத்துப்பட்டி கண்மாய்க்கு சென்றடையும் கால்வாய்களை தூர்வார வேண்டும்.   மதுரைக் கோட்ட  நீர்வள ஆதாரத்துறை தலைமைக் கண்காணிப்புப் பொறியாளர் மாடக்குளம் கண்மாய் கரைப் பகுதிகள் மற்றும் முத்துப்பட்டி வீர முடையன் கண்  மாய்க்கு  செல்லும் வரத்து கால்வாய்களை  ஆய்வு செய்து கண்மாயின் இருபுறம் உள்ள கரைகளை பலப்படுத்தும் பணிகளை உட னடியாகத் தொடங்க வேண்டும். பருவம் தப்பி மழை பெய்வதால் தண்ணீரைச் சேமிப்ப தற்கும் உபரி தண்ணீரை பாசனத்திற்கு பயன்  படுத்துவதற்கு வசதியாக மாடக்குளம் கண்மாய்  தெற்கு மடையில் இருந்து வரும்  கால்வாய், முத்துப்பட்டிக்கு வரும் வரத்துக் கால்வாய், மதுரை புறவழிச்சாலை சிருங்  கேரி மடம் அருகில் உள்ள துரைச்சாமி நகர் கால்வாய்களை தூர்வாரி கண்மாயிலிருந்து வரும் உபரி நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரைக்கல் வாய்க்காலை தூர்  வார வேண்டும்.