மதுரை, ஜூன். 1-
குழந்தைகள் விழுங்கிய ஊக்கு களை அறுவை சிகிச்சையின்றி அகற்றி மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனை மருத்துவர்கள் சாதனை படைத் துள்ளனர்.
குழந்தைகள் நலத்துறை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 2 வய துக்குட்பட்ட மூன்று குழந்தைகள் விழுங்கிய ஊக்கு மற்றும் சாவி ஆகியவற்றை அறுவை சிகிச்சை யின்றி அரசு இராஜாஜி மருத்துவ மனை மருத்துவர்கள் அகற்றியுள்ள னர்.
சிவகங்கை மாவட்டம் மானா மதுரையை சேர்ந்த அகல்யா- ரவிச் சந்திரன் தம்பதியினரின் இரண்டரை வயது ஆண் குழந்தையும், தூத்துக் குடியை சேர்ந்த சாரா- பெனியல் ஜெபராஜ் தம்பதியின் ஒன்றரை வயது ஆண்குழந்தையும் ஊக்கை விழுங்கிய நிலையில் உயிருக்கு ஆபத் தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.எந்த வித அறுவை சிகிச்சை யும் மேற்கொள்ளாமல் எண்டாஸ் கோப்பி மூலம் ஊக்கை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
அதேபோல மிகவும் அபூர்வமாக கரூரை சேர்ந்த அனிஸ்டா கனகரா ஜின் 2மாத ஆண்குழந்தை சாவியை விழுங்கிய நிலையில் அதனையும் மருத்துவர்கள் அகற்றி உயிரை காப்பாற்றினர்.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் ஒரு வருடத்தில் 30க்கும் மேற்பட்ட 2 மாதம் முதல் இரண்டரை வயது வரையுள்ள குழந்தைகள் சாவி, ஊக்கு, கிளிப், தோடு உள்ளிட்ட வற்றை கவனக்குறைவாக விழுங்கும் நிலையில் எந்தவித அறுவை சிகிச்சை மின்றி அவற்றை மருத்துவர்கள் அகற்றி ,உயிரையும் காப்பாற்றி சாதனை புரிந்து வருகின்றனர்.