districts

img

மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

பணிநீக்கம் செய்யப்பட்ட 152 பேரை பணியில் சேர்த்திடுக:

309 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்குக!

மதுரை, டிச. 14- மதுரை மாநகராட்சியில்  பொறியியல் பிரிவில் பணிபுரியும் தெருவிளக்கு , கழிவு நீரேற்று நிலையம் மற்றும் குடிநீர் பிரிவைச் சேர்ந்த 152 - க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாகி விட்டது. அவர்க ளை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும்.  தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சேமநலநிதி நிலுவைத் தொகை யினை உடனடியாக கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தினக்கூலி ஒப்பந்த தூய்மைப் பணியாளர் கள் 309 பேரை நிரந்தரமாக்கிட வேண்டும். ஆட்சியர் அறிவித்த சம்பளத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில்  மதுரை  மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் செவ்வாயன்று  மாநகராட்சி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.  இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். போராட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட செயலாளர் இரா. தெய்வராஜ் பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட பொ துச்செயலாளர் ம. பாலசுப்பிரமணியம் பேசி னார். போராட்டத்தில் மாவட்ட பொருளா ளர் கருப்பசாமி , மாவட்ட நிர்வாகிகள் விஜயன், ரமேஷ், கண்ணன், நாச்சி யப்பன், சரவணன், வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

;