districts

மதுரை முக்கிய செய்திகள்

வீட்டில் வெடி பொருட்கள் பறிமுதல்:  கணவன் மனைவி மீது வழக்கு

வெம்பக்கோட்டை, மார்ச் 1- வெம்பக்கோட்டை வட்டம், ஏழாயி ரம்பண்ணையை சேர்ந்தவர் பால் பாண்டி. இவரது மனைவி புஷ்பம். இவர் கள் வீட்டில் அரசு அனுமதியின்றி வெடி பொருட்கள் வைத்திருப்பதாக புகார் எழுந்தது.  இதுகுறித்து சங்கரகோட்டை கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் அங்கு சோதனை நடத்தினர். இதில், ரூ. 60ஆயிரம் மதிப்பிலான வெடிபொருட் கள் இருப்பது தெரிய வந்தது. வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீ சார் கணவன் மனைவி மீது வழக்குப் பதிவு செய்தனர். 

மண்டப உரிமையாளரை தாக்கி நகை பறித்தவர் கைது

விருதுநகர், மார்ச் 1- விருதுநகரில் திருமண மண்டப உரி மையாரைத் தாக்கி நகையை பறித்துச் சென்றவரை போலீசார் கைது செய்த னர். விருதுநகர் பெத்தனாட்சி நகரில் திரு மண மண்டபம் நடத்தி வருபவர் பிர்லா சேகரன்(77). இவர் தனது திருமண மண்ட பத்தில் இருந்த போது, அங்கு வந்த வாலி பர் ஒருவர், மண்டபம் வாடகைக்கு வேண் டும் எனக் கூறியுள்ளார். பின்பு, மண்ட பத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், திடீரென பிர்லாசேக ரனை தாக்கியதோடு, அவர் அணிந்தி ருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து விருதுநகர் புறநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா தலைமையில் குற்றவாளியைத் தேடி வந்தனர். இதில், மேற்படி குற்றச் செயலில் ஈடுபட்டது பராசக்தி நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன்(38) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தங்கச் சங்கிலியை யும் மீட்டனர். 

கேரளாவுக்கு  கஞ்சா கடத்த முயன்ற  3 பேர் கைது;  10 கிலோ பறிமுதல்

தேனி, மார்ச் 1- தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேர ளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற பெண் உட்பட 3 பேரை கைது செய்த காவல் துறையினர் 10 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர். கம்பம் கோம்பை சாலையில் நாக கன்னி அம்மன் கோவில் பகுதியில் கஞ்சா கடத்த இருப்பதாக ரகசிய தகவல் அடிப்ப டையில் கம்பம் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விஜய்ஆனந்த் தலை மையிலான காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கம்பத்தில் குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்த இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர் . விசா ரணையில் கம்பத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி லதா (43), தேவாரத்தை சேர்ந்த தங்கமாயன் மகன் பாலமுருகன் (28), கூடலூரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் சுரேஷ் (41) என்பது தெரியவந்தது. தப்பி ஒடிய கம்பம் கோம்பை சாலையை சேர்ந்த ரத்தினம் மகன் சசி கனியை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

பள்ளி மாடியிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த மாணவன் 

 தேனி, மார்ச் 1- பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மதுரையில் தனியார் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாளையம் தண்ணீர் தொட்டி தெரு வைச் சேர்ந்தவன் சரவணக்குமார் என்ப வர் மகன் நிகிலன் (10).இவர் க.புதுப் பட்டியில் உள்ள எஸ்.பி.எம் தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவ தினத்தன்று 2 வது மாடியில் உள்ள வகுப்பறையிலிருந்து கீழே வந்த போது படிக்கட்டில் தவறி விழுந்துள்ளார். அப்போது பின்னந்தலையில் ரத்த காயம் ஏற்பட்டு பாளையம் அரசு மருத்து வமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டான். பின்னர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்க் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.  இதுகுறித்து சரவணக்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.

நீர்வரத்தின்றி முல்லைப் பெரியாறு அணையில் சரிந்து வரும் நீர்மட்டம்

தேனி, மார்ச் 1- நீர்வரத்தின்றி முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 128.42 அடியாக சரிந்துள்ளது.  பருவமழை காரணமாக முல்லைப் பெரி யாறு அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் மாதம் 142 அடி வரை தேக்கப்பட்டது. அதன் பிறகு மழை நின்ற போதிலும் அணையின் நீர்மட்டம் 140 அடிக்கு மேல் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தற்போது மழை முற்றிலும் நின்று விட்ட போதிலும் குடிநீர் மற்றும் விவசாய தேவை களுக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நீர் மட்டம் சரிந்து கொண்டே வந்தது. அவ்வப்போது மழை பெய்து வந்த நிலை யில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.செவ்வாய் கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 128.60 அடியாக உள்ளது. திங்கட் கிழமை வரை 108 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் அடியோடு நின்றது. அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4396 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டமும் 68.42 அடியாக உள்ளது. நீர்வரத்து 238 கன அடி. திறப்பு 422 கன அடி. இருப்பு 5426 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 41.40 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 103.15 அடியாக வும் உள்ளது.

தேனி மாவட்டத்தில்  மார்ச் 12-ல் மக்கள் நீதிமன்றம்

தேனி, பிப்.1- தேனி மாவட்டத்தில் வருகிற 12 ஆம் தேதி நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணி கள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடை பெறுகிறது.  இதுகுறித்து தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விஜய் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தேசிய சட்ட ப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி பெரிய குளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் வரும் 12ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் அனைத்து நீதி மன்ற வளாகத்திலும் நடத்தப்பட உள்ளது. நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு வழக்கறிஞர் உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடத் தப்படும். மோட்டார் வாகன விபத்து, இழப்பீடு சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து மற்றும் பணம் சம்மந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக்கூடிய  குற்ற வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆக்கி ரமிப்பு, தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வங்கிக் கடன் சம்பந்தமான வழக்குகள், குடும்ப வன்முறை சட்ட வழக்கு, காசோலை வழக்கு, நுகர்வோர் வழக்கு, வருவாய் சம்பந்தப்பட்ட வழக்கு கள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்கு கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும். வழக்காடுபவர்கள் நேரடியாக பங்கேற்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு பிரச்சனைகளை சமா தானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் உள்ள வழக்காடுபவர்கள் மற்றும் பிரச்ச னைகளை சுமூகமாக தீர்க்க விரும்பும் நபர்கள் மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள் ளது.

வத்திராயிருப்பு அருகே விபத்தில் கணவன், மனைவி படுகாயம்

திருவில்லிபுத்தூர், மார்ச் 1-  விருதுநகர் மாவட்டம், வத்திராயி ருப்பு அருகே உள்ள கிழவன் கோயில் ரோட்டடி தெருவில் வசிப்பவர் நல்ல மாயன் (வயது 62). இவரது மனைவி சிட்டம்மாள் (வயது 50). கணவன், மனைவி இருவரும் சம்பவத்தன்று மாலை தங்களது தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் பிள வக்கல் டேம் ரோட்டில் வந்து கொண்டி ருந்தனர்.அப்போது அந்த வழியே எதிரே ராஜபாளையம் தருமபுரம் கனக ராஜ் என்பவர் ஓட்டி வந்த கார் , மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில்  நல்ல மாயன், சிட்டம்மாள் ஆகியோர் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இது குறித்து கூமாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்வி அலுவலகத்தில் 2 ஆவது முறையாக கொள்ளை 

திருவில்லிபுத்தூர், மார்ச் 1- திருவில்லிபுத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் இரண்டாவது முறையாக கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.  திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திரு முக்குளம் அருகே நகராட்சி கட்டிடத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலகம் இயங்குகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி மர்ம நபர்கள் அலுவலகத்திலுள்ள கதவை உடைத்து ஆவணங்களையும் பல்வேறு சான்றுகளையும் இரும்பு ரேக் உள்ளிட்ட பொருட்களையும் திருடிச் சென்றனர். இது தொடர்பாக திருவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்துகின்றனர். இந்நிலையில் இரண்டாவது முறை யாக உதவி தொடக்கக் கல்வி அலுவல கத்தில் பூட்டை உடைத்து ஆசிரியர்களின் சம்பளப் பட்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து கின்றனர். திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரி நாதன், குற்றப்பிரிவு ஆய்வாளர் சோலை ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அலுவலக அலுவலர்களி டம் விசாரணை நடத்தினர்.

வண்ணாரப்பேட்டையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, மார்ச் 1- ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம், விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக திருநெல்வேலி வண்ணாரப் பேட்டை ரவுண்டானாவில் சிஐடியு மாவட்ட தலைவர் சென் பகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் துவக்கி வைத்தார். சிஐடியு  மாவட்ட பொருளாளர் பெருமாள்  முடித்து வைத்து பேசி னார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருணாச்சலம் விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லத்துரை,  ராஜகுரு சிஐடியு  மாவட்ட நிர் வாகிகள் ஜோதி, பீர்முகமது ஷா, கந்தசாமி உட்பட ஆர்ப் பாட்டத்தில் நூற்றுக்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

மார்ச் 10 இல் ஆர்ப்பாட்டம் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

சென்னை, பிப். 26- நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மதுபான பார்களை அரசு மூட வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. டாஸ்மாக் ஊழியர் சம்மேளனக் கூட்டம் மாநில துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி.ராமு, ஜான் அந்தோணி ராஜ், பொருளாளர் ஜி.சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கே.திருச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆளும் கட்சி தொழிற்சங்க நிர்ப்பந்தம், துறை அமைச்சரின் சிபாரிசு காரணமாக நூற்றுக்கணக்கான பணியிட மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. பணி மாறுதலில் பெருமளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் ஊழலற்ற அரசு நிர்வாகத்தை அளிப்பேன் என்ற வாக்குறுதிக்கு விரோதமாக அதிகாரிகளும், துறை அமைச்சரின் அலுவலகமும் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய பொது பணியிட மாறுதல் கொள்கையை உருவாக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடைகளின் முன்னால் அமைக்கப்பட்ட தடுப்பு, பந்தல் மற்றும் கிருமிநாசினி ஆகியவைக ளுக்கான செலவுத் தொகையை வழங்காமல் ஊழியர் தலையில் திணிக்கப்படுகிறது. மேலும், கடைகளை தூய்மைப்படுத்தி வர்ணம் அடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான செலவுத் தொகையும் வழங்கவில்லை. ஊழியர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்தை கடையின் மின்சார கட்டணம், சரக்கு இறக்கு கூலி என பல வகைகளில் செலவிடும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, கடைக்கான பராமரிப்பு செலவுகளை முழுமையாக வழங்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனம் கடைகளில் உள்ள மதுபான சரக்குகளை அடமானம் வைத்து 1,361 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்திற்கு என்று சொந்தமான மது ஆலைகள் இல்லை. எனவே மூலப்பொருள், உற்பத்தி செலவு என எந்த செலவும் கிடையாது. சில்லறை விற்பனையில் நட்டம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் கடன் மற்றும் நட்டக் கணக்கு காட்டுகிறது. இது ஏற்புடையதல்ல. இப்படி கடன்கார நிறுவனமாக டாஸ்மாக் நிறுவனத்தை அரசு ஏன் நடத்த வேண்டும். சட்டத்தில் பொது இடங்களில் மது அருந்த அனுமதி இல்லை என்ற நிலையிலும், டாஸ்மாக் நிர்வாகம் பார் உரிமம் வழங்கியுள்ளதை ஏற்க மறுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் 6 மாத காலத்திற்குள் பார்களை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனவே அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் பார்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 10ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் இதர சங்கங்களையும் இணைத்து, மாநிலம் முழுவதும் ஊழியர்களை திரட்டியும்  சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,மார்ச் 1-  அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண் காணிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் லாபநோக்க முடன் தனியாக மாலையில் டியூசன் எடுப்ப தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்ட விரோதம். பணம் பெற்றுக் கொண்டு லாபநோக்கத்துடன் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறித்து புகார் அளிக்க தமிழ்நாடு அரசு இலவச தொலை பேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்றும், டியூசன் எடுக்கும் அரசுப் பள்ளி  ஆசிரியர்களை கண்காணித்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி யிருந்தது. மேலும், இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க பிரத்யேக மாக இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் இதுகுறித்த வழக்கு மார்ச் 1 அன்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது, அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. மேலும்,  தனியார் டியூஷன், பகுதி நேர வேலை, இதர வேறு  தொழில்கள்  உள்ளிட்டவைகளில் ஈடுபடும் ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.