districts

மதுரை முக்கிய செய்திகள்

குழித்துறை பகுதிகளில்   இன்று மின்தடை

குழித்துறை,டிச. 8  குழித்துறை துணை மின்நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பரா மரிப்பு பணிகள் காரணமாக ஆலுவிளை,  மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விள வங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை,  இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் வியாழக்கிழமை (டிச. 9) காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  மின் வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சாலை விபத்தில் தனிப்பிரிவு காவலர் பலி

வெம்பக்கோட்டை, டிச.8- விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதி யதில் தனிப் பிரிவு காவர் உயிரிழந்தார். வெம்பக்கோட்டை அருகே உள்ள திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(36). ஆலங்குளம் காவல் நிலையத்தில் தனிப் பிரிவு காலாராக பணி புரிந்து வந்தார். இவர், தினசரி இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு வந்து செல்வது வழக்கம். திங்களன்று இரவு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். குண்டாயிருப்பு அருகே சென்ற போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது இரு சக் கர வாகனம் மோதியது. இதில், படுகாயம டைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆலங்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஊரணியில் கிடந்த பெண் சிசு

காரியாபட்டி, டிச.8- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது நாகநேந்தல் கிராமம். இங்கு, பாலாஜி என்பவருக்குச் சொந்த மான புன்செய் நிலத்தில் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட ஊரணியில் பெண் சிசு ஒன்று கிடந்துள் ளது. இதையடுத்து, கிராம நிர்வாக அலு வலர் ராஜலஷ்மி ஆவியூர் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா பறிமுதல்:  ஒருவர் கைது

காரியாபட்டி, டிச.8- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ளது ஆவியூர். இங்குள்ள அம்மா பூங்கா அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையிலான காவல்துறையினர் சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு, கஞ்சா விற்பனை யில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த சமையன் என்பவரைப் பிடித்தனர். மற் றொருவரான ராமச்சந்திரன் தப்பி ஓடி விட்டார். சமையன் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமி ருந்து 1150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவரைத் தேடி வரு கின்றனர்.

சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

கடமலைக்குண்டு, டிச.8- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ் வாய்க்கிழமை தேனிமாவட்டம் கொம்புக்காரன்புலியூர் கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கடமலைக் குண்டு சார்பதிவாளர் கட்டிடத்தை காணொ லிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் மற் றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் சார்பதிவாளர் அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய கட்டடத்தைப் பார்வை யிட்டனர்.  அலுவலகத்திற்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவைகள் தொடர்பாக கேட்ட றிந்தனர். தொடர்ந்து கடமலைக்குண்டு அருகே புதிய சமத்துவபுரம் கட்டப்பட உள்ள இடத்தை ஆட்சியர் ஆய்வு செய் தார். அப்போது விரைவில் முதற்கட்டப் பணிகளை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வருஷ நாடு அருகே பொன்நகர் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பேருந்து ஊழியரை  மன்னித்து விடுங்கள் மீனவர் செல்வமேரி அம்மாள் பேட்டி

நாகர்கோவில் டிச. 08 கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் மீன் விற்று விட்டு பேருந்தில் ஏறிய பெண்மணியை “மீன் வித்துட்டா வர்ற? நாறும் இறங்கு இறங்கு” என உடலில் துர்நாற்றம் வீசுவதா கக்கூறி அரசு பேருந்தில் இருந்து நடத்துநரால் இறக்கி விடப்பட்டார். இந்தச் சம்பவம் சமீபத்தில் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அந்த சம்பவத்திற் காக வருத்தம் தெரிவித்தார். அந்த நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவுட்டார். இந்நிலையில் டிச.8 புதன் அன்று மீனவர் செல்வமேரி அம்மாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது “என்னை பேருந்திலிருந்து இறக்கி விட்டவர்களை மன்னித்து விட வேண்டும், தண்டனை கொடுத்தால் அது அவர்களின் குழந்தைகளை பாதிக்கும்.இனி இப்படி செய்யக் கூடாது, உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி” என பெருந்தன்மையோடு கோரிக்கை விடுத்தார் 

தலித் மக்களின் காலனி வீடுகளை  பராமரிக்க நிதி ஒதுக்க சிபிஎம் வலியுறுத்தல்

திண்டுக்கல், டிச.8- திண்டுக்கல்லில் சிதிலம டைந்து கிடக்கும் அரசு காலனிவீடு களை மராமத்து செய்ய வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடத்தினர். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட பல கிராமங்க ளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தமிழக அரசின் சார்பாக தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன 15 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இந்தக் கட்டடங்கள் மிகவும் ஆபத்தாக இடிந்துவிழும் நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாலபாரதி இந்த வீடுகளைபராமரிப்பதற்காக தனது சட்டமன்ற தொகுதி நிதியிலி ருந்து ரூ.15,000 ஒதுக்கினார்  மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்புசாமி, அஜாய்கோஷ், அடியனூத்து ஊராட்சித் தலைவர் ஜீவானந்தம், சிபிஎம்ஒன்றியக் கவுன்சிலர் செல்வநாயகம், ஜீவா நந்தினி, ராஜாமணி, கே.பி.நேரு, ஆசைத்தம்பி, லெனின்,வாலிபர் சங்கம் சார்பாக பாலமுருகன், மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய துணை செயலாளர் ஜெயந்தி, மாதர் சங்க ஒன்றிய பொருளாளர் சுதந் திராபாய் செல்வகனி. விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வா கிகள் பழனிச்சாமி, அம்மையப் பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிவாரணம் வழங்கக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச. 8 கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த 3 மாதங்களாக பெய்த கன மழையால் பல்வேறு துறை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பெரும் மழை  மற்றும் புயல் எச்சரிக்கையால் தங்களின் வாழ்வாதாரமான மீன்பிடித்தொழிலை இழந்து நிற்கும் மீனவர்கள் அனைவருக்கும் மழை நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் குளச்சல் பேருந்தில் மீனவர் என்பதனாலேயே ஏற்ற மறுத்த பேருந்து ஊழியரின்  தீண்டாமை கொடுஞ்செயலை கண்டித்தும் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர்  பி. பெர்க்மான்ஸ் தலைமை வகித்தார், தமிழ்நாடு மீன்பிடி தொழற்சங்க கூட்டமைப்பு தலைவர்  ஜி.செலஸ்டின் , தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச்செய லாளர் எஸ்.அந்தோணி, சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.அலெக்சாண்டர் , மாவட்ட செயலாளர் பி.சகாய பாபு , மாவட்ட பொருளாளர் ஏ.பிராங்கிளின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் சாந்தகுமார், சிஐடியு மாவட்ட துணை தலைவர் சோபன் ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.  திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்

 

;