districts

மதுரை முக்கிய செய்திகள்

செப்.24ல் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு - கண்காட்சி

தூத்துக்குடி, செப். 21 தூத்துக்குடியில் வருகிற 24ஆம் தேதி ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் , “வர்த்தக மற்றும் வணிக வாரம்” அனுசரிக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவின் ஏற்று மதியினை உலகளவில் மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு வர்த்தகஇணை இயக்குநர் அலுவலகமும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய அலுவலகமும் இணைந்து நடத்தும் ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி வரும் 24 அன்று காலை 10 மணியளவில ஏவிஎம் கமல வேல் மஹால் எட்டையபுரம் ரோடு, தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் ஏற்றுமதி குறித்த ஆலோசனைகள், வாய்ப்புகள் மற்றும் திட்ட விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. எனவே ஏற்றுமதி செய்ய ஆர்வமுள்ள இளை ஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் தொ ழில் நிறுவனத்தினர் பங்கேற்று வல்லுநர்களின் விளக்கங்களை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு 

தூத்துக்குடி, செப். 21 தூத்துக்குடியில் 23ம் தேதி நடைபெற இருந்த ‘விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் 23.09.2021 அன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

தூத்துக்குடி, செப். 21 திருச்செந்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.தூத்துக்குடி மாவட்டம், மேல திருச்செந்தூர் அருகே தளவாய்புரம் புதூரைச் சேர்ந்தவர் கணேசன் மகன்செல்வம் (12). திங்களன்றுஅப்பகுதியில் உள்ள திருமண வீட்டில்பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது பந்தல் அமைக்கும் பணிக்கு உதவியாக நின்று கொண்டிருந்த சிறுவன் செல்வம் மீது மின்சாரம் பாய்ந்து  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இது குறித்து குரும்பூர் போலீஸ்இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

வரதட்சணை கேட்டு பெண்ணை  துன்புறுத்திய கணவர் கைது

தூத்துக்குடி, செப். 21 ஸ்ரீவைகுண்டம் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்திய கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:  தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வடக்கு புறையூர்கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுராஜ்மனைவி ஜெயராணி (35). இந்த தம்பதியருக்கு கடந்த 2013இல் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது பெண் வீட்டார் 20 பவுன் நகையை வரதட்சணை யாக கொடுத்துள்ளனர். இந்நிலையில், மேலும் 5 பவுன் நகை கேட்டு அழகு ராஜ் மனைவியை துன்புறுத்தினாராம். இதற்கு அவரது தாயார் கசங்காத்தா(60), அக்கா மாரி யம்மாள்(36) ஆகியோரும் உடந்தையாக இருந்தார்களாம். இதுகுறித்து ஜெயராணி, ஸ்ரீவை குண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் லட்சுமி பிரபா வழக்குப் பதிந்து கணவர் அழகு ராஜை கைது செய்தார். மேலும் அவரது தாய், மற்றும் சகோதரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஊராட்சி தலைவரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது

தூத்துக்குடி, செப். 21 விளாத்திகுளம் அருகே ஊராட்சி தலைவரை தாக்கியதாக அண்ணன்-தம்பியை காவல்துறை யினர் கைது செய்தனர். விளாத்திகுளம் அருகே யுள்ள கே.சுந்தரேஸ்வர புரத்தைச் சேர்ந்தவர் சோலையப்பன் மகன் போஸ் (58). இவர் கே.சுந்த ரேஸ்வரபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்துள்ளது. இதனால் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வடிகால்களை ஜேசிபி மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அதே கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சக்தி வேல் மகன் செந்தில்குமார் (41) என்பவர் தனது வீட்டின் முன்பு சரல் மண் குவித்து வைத்திருந்தா ராம். அதனை அப்புறப்படுத்த முயன்றபோது அவர் ஊராட்சித் தலைவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் செந்தில்குமார் மற்றும் அவரது அண்ணன் கருங்கதுரை (45) ஆகிய இருவரும் ஊராட்சித் தலைவர் போஸை இரும்பு கம்பியால் தாக்கினார்களாம். இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சித் தலைவரின் மகன் கார்த்திக் (22) என்பவர், செந்தில் குமாரை கம்பால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர்கள் இருவரும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2பேரையும் கைது செய்தார். 

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நெல்லை மாவட்ட மாநாடு

திருநெல்வேலி, செப்.21- தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நெல்லை மாவட்ட 21 வது மாநாடு வள்ளியூர் எம்.எஸ். மஹால்  திருமண மண்டபத்தில் பி,தியாகராசன் தலைமையில் நடைபெற்றது, சங்க கொடியை என், தில்லை நடராசன் ஏற்றி வைத்தார். ஏ.இசக்கிமுத்து, ஐ. வடிவேல், ஏ.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஏ.ஜோசப் வரவேற்புரை நிகழ்த்தினார். இ.சீனி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். எஸ்.ராஜாமணி மாநாட்டை துவக்கி பேசினார். மாவட்டச் செயலாளர் சி.கருப்பையா, செயலாளர் அறிக்கையை சமர்பித்தார். பொருளாளர் அறிக்கையை இ..சீனி சமர்பித்தார். இணைச் செயலாளர் எஸ்.சண்முகசுந்தரம், மாநில துணைத்தலைவர் ஆர்.நேசகுமாரி மல்லிகா,சிஒடிஇஇ-நெல்லை எஸ்.கந்தசாமி, மாநில உபதலைவர் டி.திருத்துவராஜ், தூத்துக்குடி செயலாளர் எஸ்.முத்துசாமி, குமரி மாவட்ட செயலாளர் ஆர்.பிரான்சிஸ் சேவியர், விருதுநகர் மாவட்ட தலைவர் ஆர்.சந்தியாகப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயலாளர் எஸ்.ஜெகதீசன் சிறப்புரையாற்றினார். எல்.அம்பலவாணன் நன்றி கூறினார்.. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. மாநாட்டில்  நிர்வாகிகளாக மாவட்ட தலைவர் சி.கருப்பை யா, மாவட்டச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் இ.சீனி, மாவட்ட அலுவலகச் செயலாளர் சி.கணபதி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில்  பாதிக்கப்பட்ட திரிபுரா மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.5800 வசூல் செய்யப்பட்டது.

சாத்தான்குளம்  அருகே  வெடி விபத்து

தூத்துக்குடி, செப். 21 சாத்தான்குளம் அருகே காரில் இருந்த வெடி வெடித்ததில் கார் வெடித்துச் சிதறியது. இதனால் அருகிலிருந்த 30க்கு மேற்பட்ட வீடுகளிலும் சேதம் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை ஆனந்தவிளை யை சேர்ந்தவர்  தானியல் மகன் பாலகிருஷ்ணன் (45). இவர் நெல்லை மாவட்டம் திசை யன்விளை அருகே உள்ள அணைக் கரையில் வெடிகுடோன் அமைத்து திருமணம் மற்றும் திருவிழாக்களுக்கு வெடி தயாரித்து கொடுத்து வருகிறார். திங்களன்று அவரது காரில் சீட்டுக்கு அடியில் ரூ.30 ஆயிரம் மதிப்பில் தயாரிக் கப்பட்ட வெடிகளை வைத்துவிட்டு அவர் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்ததும் ரிமோட் மூலம் கார் கதவை மூடி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காரில் இருந்த வெடி வெடித்துச் சித றியதில் கார் வெடித்து சுக்கு நூறாகியது. இதில் பாலகிருஷ்ணனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. மேலும், அருகாமையிலுள்ள 30-க்கு மேற்பட்ட வீடுகளில் விரிசல் உண்டாகி சேதமடைந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து சாத்தான் குளம் டிஎஸ்பி கண்ணன், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் (பொ றுப்பு) பாஸ்கர், உதவி ஆய்வாளர் முரளிதரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து காரில் அனுமதியின்றி வெடி பொருள் கள் கொண்டு வந்ததாக பால கிருஷ்ணனை காவலர்கள் கைது செய்தனர். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.  நல்வாய்ப்பாக இவ்விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் குண்டு வெடித்ததுபோல் இருந்தாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். காரில் இருந்த வெடி வெடித்ததில் கார் மற்றும் வீடுகள் சேதமானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

;