districts

மதுரை முக்கிய செய்திகள்

பழங்குடி மக்களுக்கு  குடிநீர் வசதி செய்து தரப்படுமா?

அரியலூர், டிச. 6- அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள சம்போடை கிராமத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க கொடி யேற்ற நிகழ்ச்சி கிளை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின்  மாவட்ட செயலாளர் இரா.மணி வேல், ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.  சம்போடை கிராம பழங்குடி இருளர் இன மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.  வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். மயான பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை செப்பனிட்டு தர  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ஏ.பூபாலன்  மற்றும் உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர். கிளை செயலா ளர் நாகராஜ்  நன்றி கூறினார்.

பயிற்சி மையத்திற்கு  பிரிண்டர் கருவி வழங்கல்

தஞ்சாவூர், டிச. 6 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள புனல் வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியில் 1991-லிருந்து 1993 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள், ஒருங்கிணைந்து ஊரகப் பகுதி மாணவர்களின் நலன் கருதி, தாங்கள் பயின்ற பள்ளி வளாகத்தில், அரசுப் பணிக் கான போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை தொடங்கியுள்ள னர். புதுக்கோட்டை தன்னார்வலர் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தோடு இணைந்து பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர்.  இந்நிலையில், பயிற்சி மையத்திற்கு மாணவர்கள் பயன்பெறும் வகையில், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பிரிண்டர்  இயந்திரத்தை, பேராவூரணியைச் சேர்ந்த முடநீக்கியல் டாக்டர் துரை.நீலகண்டன், அவரது நண்பரும் வெளிநாட்டு வாழ்  இந்தியருமான ரெங்கராஜ் ஆகியோர் வழங்கினர். இதனால்,  ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுக்கு பயனுள்ளதாக இருக்கும் என மாணவர்கள் மகிழ்ச்சியோடு நன்றி கூறினர். 

நூறு நாள் வேலை கேட்டு மனு

திருத்துறைப்பூண்டி டிச.6 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வரம்பியம் ஊராட்சியில் நூறு நாள்  வேலை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு  கொடுக்கும் போராட்டம் திங்களன்று ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் டி.சுப்ர மணியன், ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர் முருகேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.

சித்தமல்லி அணையில் நீர் வெளியேற்றம்

அரியலூர், டிச. 6 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சித்த மல்லி நீர்த்தேக்கம் அணையானது ஞாயிறன்று இரவு பெய்த  கனமழை காரணமாகவும், பல்வேறு ஏரி, குளம், குட்டை கள் நிரம்பி அதிக நீர்வரத்து காரணமாகவும் முழு கொள்ள ளவை எட்டியது. இதையடுத்து, அணையிலிருந்து வினா டிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு கரையோர மக்க ளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தோழர் சண்முகம் படத்திறப்பு நிகழ்ச்சி 

தஞ்சாவூர், டிச.6 - தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் அத்திவெட்டி யில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், மூத்த தோழ ருமான ஆர்.சி.பழனிவேலுவின் மாமனார் மறைந்த சண்முகம் படத்திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் வை.சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் படத்தை திறந்து  வைத்து புகழஞ்சலி உரையாற்றினார். இதில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், மூத்த தோழருமான ஆர்.சி. பழனிவேலு, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.காசிநாதன், எம்.செல்வம், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்த சாமி, மதுக்கூர் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

உலக மண்வள தின விழா 

தஞ்சாவூர், டிச. 6- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், செருபாலக்காடு ஊராட்சியில், வேளாண்மைத் துறை மற்றும்  உழவர் நலத்துறை சார்பில் உலக மண்வள  தினவிழா நடை பெற்றது.  விழாவிற்கு, விதை சான்றளிப்புத்துறை அலுவலர் சங்கீதா தலைமை வகித்தார். வேளாண்மைத் துறை அதிகாரி கள் மண் வளம் மற்றும் இயற்கை விவசாயம், மகசூலை  அதிகரிக்கும் நுண்ணூட்டங்கள், தேசிய மண்வள அட்டை யின் பயன்கள், மண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும்  முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். கிரா மத்தினர், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.  பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், திருக்களம்பூர் ஊராட்சியிலுள்ள கருப்புக் குடிப்பட்டியில் மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் உலக  மண் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. மரமும் மனிதனும் அமைப்பின் நிறுவனரும் மாங்குடி  அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழாசிரியருமான முகமது ஆஸிம், கருப்புக் குடிப்பட்டி ஊர்ப் பொதுமக்கள், இளை ஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது  இலங்கை கடற்படையினர் தாக்குதல்

இராமேஸ்வரம், டிச.6- இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்  பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும் வலை களை அறுத்தெறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து  சனிக்கிழமை 500 க்கும்மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.  நள்ளிரவு கச்சத்தீவு-தலைமன்னாருக்கு இடையே  மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த இலங்கை  கடற்படையினர் மீனவர்கள் மீது பாட்டில்,கற்களை கொண்டு எறிந்து தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டி யடித்தனர்.  மேலும் 20 க்கும் மேற்பட்ட விசைப் படகு களில் உள்ள மீன்பிடி வலைகளை கடலில் அறுத்தெறிந்த னர். இதனால் படகு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்புடன்  ஞாயிறன்று காலை கரை திரும்பினர். இலங்கை கடற்படை யின் அத்து மீறலை ஒன்றிய, மாநில அரசுகள் தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழக-கேரள எல்லையில் விவசாயிகள் முற்றுகை

போக்குவரத்துக்கு தடை

தேனி, டிச.6- தமிழக-கேரள எல்லை அருகே லோயர் கேம்ப்பில்  விவசாயிகள் ஞாயிறன்று முற் றுகை போராட்டம் நடத்தினர்.  முல்லைப் பெரியாறு அணையை அகற்றவேண்டும் என்று கோரி கேரள மாநி லத்தில் மோட்டார் பைக் வாகன பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பேரணிக்கு அனுமதி கூடாது என்று பெரியார் வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் தமிழக-கேரள எல்லையை முற்று கையிட்டு போராடுவோம் என்று அறிவிப்பு செய்தனர்.  இந்நிலையில் ஞாயிறன்று முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த ஐந்து மாவட்ட விவ சாயிகளை, உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையிலான காவல் துறையினர் குமுளிக்கு செல்ல அனுமதி மறுத்தனர். சாலை மறியல் செய்வதற்கு அனுமதி தாருங்கள், கேரளாவில் வாகன பேரணி சென்று கொண்டிருக்கிறது என்று கோரிக்கை வைத்தனர். காவல்துறையினர் அதற்கும் அனுமதி மறுத்தனர். இதனால் விவசாயி கள் காவல்துறையினருடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். பின்னர் பென்னிகுயிக் மண்டபம் செல்லும் வழியில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டம் எதிரொலியாக குமுளி-லோயர் கேம்ப் மலைச் சாலையில் இருபுற மும் போக்குவரத்து தடைபட்டு வாகனங்கள் வரிசையாக நின்றன. வட்டாட்சியர் அர்ஜூனன்,  துணை வட்டாட்சியர் சுருளி ஆகியோர்  போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு  வந்து விவசாயியிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். கோரிக் கைகளை மாவட்ட ஆட்சி யர் மூலம் அரசுக்கு தெரியப்படுத்துவோம் என்று கூறினார்.  அதன்பேரில் விவசாயிகள் போராட் டத்தை கைவிட்டு சென்றனர். சுமார் 2 மணி நேரம் தமிழக-கேரளா எல்லையில் போக்கு வரத்து தடைபட்டது. லோயர் கேம்பிலிருந்து கேரளா செல்லும் சாலை காவல்துறையின ரால் மூடப்பட்டது.

ரேசன் பொருட்கள் மழை நீரில் நனைந்து நாசம்

விருதுநகர், டிச.6- விருதுநகர் மாவட்டம்  இராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரம் வாகைக்குளம் பகுதியில்  உள்ள கீழகுளம் கண்மாய் நிறைந்து  வாகைக்குளம் கண்மாய்க்கு நீர் அதிகரித்து வருவதால் தரைப்பா லம் சேதமடைந்தது.  இதனால், சமுசிகாபுரத்தி லிருந்து இராமலிங்கபுரம் - முது குடி செல்லும் சாலை துண்டிக்கப்பட் டது. எனவே, அப்பகுதியில் யாரை யும் செல்ல விடாமல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும் இப்பகுதியில் நியாய விலைக்கடை உள்ளது.  அங்கு பொதுமக்களுக்கு விநியோ கம் செய்வதற்காக அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பி லான பொருட்கள் வைக்கப்பட்டி ருந்து. நியாய விலைக் கடைக்குள் மழைநீர்  புகுந்ததால் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும்  நீரில் மூழ்கி வீணாகியது.

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பேரவை

தஞ்சாவூர், டிச.6 - தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தஞ்சாவூர் வட்ட கிளை சார்பில் 6-ஆவது திட்டப் பேரவை தஞ்சாவூர் சிஐடியு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.  கிளைத் தலைவர் எம்.முனியாண்டி தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் துவக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாநில துணை தலைவர் ஜி.பஷீர் நிறைவுரையாற்றினார். மாநாட்டில், தலைவராக எம்.முனியாண்டி, செய லாளராக து.கோவிந்தராஜ், பொருளாளராக ஜி.உத்தி ராஜ் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், துணைத் தலைவர் களாக என்.வீரையன், ஆர்.மேகநாதன், எஸ்.பவுல்ராஜ், இணைச் செயலாளர்களாக வி.காமராஜ், சி.கணேசன், சி.சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டனர்.  கூட்டத்தில், “புதிய பென்சன் திட்டத்தை ரத்து  செய்ய வேண்டும். கம்யூட்டே சனுக்காக பிடித்தம் செய்யப் படும் கால அளவை, 12 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும். ஓய்வூதியர்களின் உரிமையை பாதுகாத்திட வேண்டும். ஓய்வு பெற்ற சிபிஎஸ் சந்தாதாரர்களுக்கு பணப்பயன்களை உடனடி யாக வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத் தில் உள்ள குறைகளைக்  களைந்து மருத்துவத்திற் கான முழு செலவையும் வழங்க வேண்டும். கொரோ னாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2020-21 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்டுள்ள பஞ்சப் படி உயர்வை வழங்க வேண் டும்” என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. 

;