districts

மதுரை விரைவு செய்திகள்

மின் கம்பத்தில் கார் மோதி 2 பேர் பரிதாப சாவு

தூத்துக்குடி,நவ. 26 கோவில்பட்டி அருகே சாலையின் ஓரம் இருந்த மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். மதுரை மற்றும் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் மதுரை மெஜூரா கோட்ஸ் நிறுவ னத்தில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றி செல்வதற்காக மதுரையை சேர்ந்த சொக் கலிங்கம் என்பவருக்கு சொந்தமான டிரா வல்ஸ் நிறுவனம் ஒப்பந்த்தின் அடிப்படை யில் வாகனங்களை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றும் மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த ஹரி என்பவர் வியாழன் இரவு தனது நண்பர்கள் முருகன், ரகுநாதன் மற்றும் கோபால் ஆகியோருடன் அம்பை யில் இயங்கி வரும் தான் பணிபுரியும் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை மேற்பார்வையிடுவதற்காக ஒரு காரில் சென்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இடைச்செவல் பேருந்து நிறுத்தம் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்த போது வெள்ளியன்று அதிகாலை திடீ ரென தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி அப்பகுதியில் இருந்த மின் கம்பத்தில் அதிவேகமாக மோதியது.

இதில் கார் அப்பளம்  போல் நெருங்கியது மட்டுமின்றி, மின்கம்பமும் முற்றிலுமாக சரிந்து கீழே விழுந்தது. கார் விபத்துக்குள் ளானதை பார்த்த அப்பகுதி மக்கள் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவில்பட்டி டி.எஸ்.பி.உதயசூரியன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து சென்று காரில் இருந்தவர்களை மீட்க முயற்சி எடுத்தனர். கார் மீது மின் வயர்கள் விழுந்து கிடந்தால் மின்சார வாரிய ஊழியர் கள் உதவியுடன் அப்பகுதியில் மின்சாரத் தினை தடை செய்து பின்னர் மின் வயர் களை அகற்றினர். இதையடுத்து காரில் சிக்கி இருந்தவர்களை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்புப் பணி களை மேற்கொண்டனர். முதலில் காயமடைந்து காரில்  உயி ருக்கு போராடிக் கொண்டிருந்த ஹரி (44) மற்றும் ரகுநாதன் (39) ஆகிய 2 பேரை யும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொ டர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் காருக்குள் சிக்கி உயிரிழந்தி ருந்த மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த  கோபால்(40), முருகன் (54) ஆகிய 2 பேரையும் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். உயிரிழந்த 2 பேரின் உடல்களும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப் பட்டது.  விபத்து குறித்து நாலாட்டின்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அரசு 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தூத்துக்குடி,நவ. 26 தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக பணியிடங்க ளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவிட் - 19 பேரிடர் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கீழ்கண்ட பணி யிடங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப் படையில் ஆறு மாதங்களுக்கு மட்டும் தகுதியான நபர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்களின் எண்ணிக்கை தொகுப்பூதியம் மற்றும் கல்வித்தகுதி பின்வருமாறு: Research Assistant – 2,40,000/- P.M.  Passed in Master’s Degree in Chemistry or Microbiology or Physiology or Zoology, 5 years in the Laboratory field / Research field, Lab Attendant – 16,500/- P.M. 8th pass. மேற்கண்ட பணியிடங்கள் 6 மாதங்க ளுக்கு மட்டும் .முற்றிலும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மேலும் இப்பணியி டங்கள் எக்காரணம்கொண்டும் பணி வரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர் கள் உரிய கல்வி தகுதி, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில் படித்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும் சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங் கள் (Resume) இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண் ணப்பிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : முதல்வர், அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி. விண் ணப்பிக்க கடைசி நாள் : 28.11.2021. நிர்ணயிக்கப்பட்ட 28.11.2021 பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள்   ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட சுகாதார சங்க தலைவர் /மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார்.

ம.பி., முதல்வருக்காக  செய்தியாளர்கள் வெளியேற்றம்

திருவில்லிபுத்தூர். நவ.26-  மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் புதனன்று விருதுநகர் மாவட் டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவி லுக்கு வந்தார். திருவில்லிபுத்தூர் உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் செய்தியா ளர்கள் அனுமதி குறித்து கேட்டதற்கு அனு மதிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.  புதனன்று செய்தியாளர்கள் சென்ற போது, நகர் காவல் நிலைய ஆய்வாளர் கீதா செய்தியாளர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாக  கூறினார். ஆனால், வெளியே செல்ல முடி யாது என செய்தியாளர்கள் அனைவரும் மறுத்துவிட்டனர்.  இந்நிலையில் காவல்துறையினர் அனைவரையும் கோவிலுக்கு வெளியே செல்லுமாறு கூறி கட்டாயப்படுத்தியதால் அனைவரும் வெளியே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 

 

 

;