districts

மதுரை முக்கிய செய்திகள்

தேனியில் இருந்து சபரிமலை செல்ல ஒருவழிப்பாதை அமல்

தேனி, டிச.19- ஐயப்ப பக்தர்களின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தேனி வழியே சபரிமலை செல்வதற்கு ஒரு வழிப்பாதை வெள்ளியன்று முதல் அம லுக்கு வந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் மகர ஜோதி ஜனவரி 14-ம் தேதி நடைபெற வுள்ளது. இதற்காக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் தேனி வழியே அதிகளவில் சென்று கொண்டிருக்கின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் வாகனங்கள் நெரிசலின்றி சென்று வர கம்பம்மெட்டு சாலையானது ஒரு  வழிப்பாதையாக மாற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வெள்ளியன்று முதல் இச்சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி வாகனங்கள் தேனியில் இருந்து சின்னமனூர், கம்பம் சென்று பின்பு கம்பம்மெட்டு வழியே ஆமையார், புளியமலை, கட்டப்பனை, குட்டிக்கானம், முண்டக்காயம், எரிமேலி, பம்பை வழியே அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும். தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் பம்பை, குட்டிக்கானம், பீர்மேடு, பாம்ப னாறு, வண்டிப்பெரியாறு, குமுளி, கூட லூர், கம்பம், சின்னமனூர் வழியே தேனி யை கடந்து செல்லலாம்.  போக்குவரத்து  வழித்தட மாற்றத் தினை ஒழுங்குபடுத்த வும், தகவல்களை தெரிவிக்கவும் காவல் துறையினர் ஆங்காங்கே இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டிராக்டர் கடனை செலுத்த முடியாமல் விவசாயி தற்கொலை

விருதுநகர், டிச.19- விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில் அருகே விழுப்பனூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (44). விவசாயியான இவர் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு கடன் வாங்கி 2 டிராக்டர் களை வாங்கியுள்ளார். அதன் பின்பு விவ சாயம் சரிவர நடைபெறவில்லை. இத னால் பன்னீர்செல்வத்தால் கடன் தவணை யை சரியாக செலுத்த முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர், வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வைகை அணைக்கு நீர்வரத்து குறைவு

தேனி, டிச.18- ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டி கடந்த சில நாட்க ளாக அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.  இதில் கடந்த சில நாட்களாக அணை யின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்த காரணத்தினால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையில் இருந்த அதிகப்படியான தண்ணீர் வெளியேற் றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.  இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலை யில்  அணைக்கு நீர்வரத்து குறைந்துள் ளது. தற்போது 1,101 கனஅடி தண்ணீர் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது. அணை யில் இருந்து 1,069 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் அணை யின் நீர்மட்டம் 70.21 அடியாக உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளது.

கால்நடை வளர்ப்புக்கு வட்டியில்லாமல் கடன்

புதுக்கோட்டை, டிச.19 - புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டி யில்லாமல் ரூ.3 லட்சம் வரை பயிர்க்கடன்  தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விவ சாயக் கடன்களுக்கு மட்டுமே வட்டி யில்லாமல் கடன் வழங்கப்பட்டு  வரும் நிலையில், இனி கால்நடை வளர்ப்பு  மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கும் வட்டியில்லாமல் நடைமுறை மூலதனக் கடன்கள் வழங்கப்பட உள்ளன. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர் களுக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கடன் சங்கங்க ளின் மூலம் கே.சி.சி கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிர்க்கடன் ஏதே னும் பெறாதிருந்தால் கால்நடை வளர்ப்பு  மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.2 லட்சத்திற்கு மிகாமலும், பயிர்க்  கடனோடு சேர்த்து ரூ.3 லட்சத்திற்கு  மிகாமலும் வழங்கப்படும். இக்கடனுக் கான தொகையை கடன் பெற்ற தேதியிலி ருந்து ஓராண்டுக்குள் செலுத்த வேண்டும்.  தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டி வசூலிக்கப் படுவதில்லை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு வேலைக்கு முயன்ற  இளைஞரை ஏமாற்றிய மர்ம நபர்கள்

தஞ்சாவூர், டிச. 19 -  தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் முள்ளங்குடி  தோப்புத்தெருவை சேர்ந்தவர் சுதாகர் (41). இவர் வெளிநாட்டு பணிக்கு முயற்சி செய்து வந்தபோது, பேஸ்புக்கில் வந்த வெளிநாட்டு வேலை விளம்ப ரத்தை பார்த்து அதில் இருந்த செல்போன் எண்ணில்  தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசியவர்கள் கனடாவில் வேலை உள்ளது  என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கேட்ட ஆவணங்கள் மற்றும் பிராசசிங் கட்டணம் ரூ.5  ஆயிரம் ஆகியவற்றை அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். தொடர்ந்து விசா, ஒர்க்  பர்மிட் என்று கூறி பலமுறை அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பி உள்ளார். இப்படி சுதாகர் ரூ.3.37  லட்சம் வரை பணத்தை அனுப்பியும் அவருக்கு வெளி நாட்டுக்கு செல்ல விசாவோ, ஒர்க் பர்மிட்டோ அனுப்பி  வைக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த சுதாகர் கும்பகோ ணத்தில் உள்ள ஒரு டிராவல்ஸ்சில் விசாரித்துள்ளார். அப்போதுதான் அது பொய்யான விளம்பரம் என்றும்,  பணத்தை அவர்கள் ஏமாற்றி விட்டனர் என்றும் தெரிய  வந்துள்ளது. இதையடுத்து சுதாகர் தஞ்சை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் செய்ததன்பேரில், ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

மாணவிகளை கழிவறையை  சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் போராட்டம்

சின்னாளப்பட்டி, டிச.19- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே செங்கட்டான்பட்டியில் அரசினர் நடு நிலைப்பள்ளியில் மாணவிகளை கழி வறைகளை சுத்தம் செய்யச் சொல்லி பள்ளி யின் தலைமை ஆசிரியை சுகுமாரி மாணவி களை வற்புறுத்தியதால் ஒருவாரகாலமாக மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்து வந்ததாக மாணவிகள்பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.  இதில் ஒவ்வாமை ஏற்பட்டு மாணவி கள் உணவருந்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஒரு மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு வத்த லக்குண்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.  மேலும் பள்ளியில் பணியாற்றும் மற்றொரு ஆசிரியரான ஸ்டீபன் என்பவர்  அவர் கொண்டுவரும் உணவுப் பாத்தி ரங்களை சாப்பிட்ட பின்பு கழுவச்சொல்லி வற்புறுத்துவதாகவும் மறுத்தால் மிரட்டு வதாகவும் கூறப்படுகிறது.  இதனையடுத்து பெற்றோர்கள் பள்ளி யை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் காத்தி ருப்புப் போராட்டமாக மாறியுள்ளது.  இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். பணிநீக்கம் செய்திடுக!  இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டி.செல்வமுருகன், மாவட்ட செயலாளர் ஏ.கே.முகேஷ் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களை  முறையாக பணியமர்த்திட வேண்டும். மாண வர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமையாசிரியரையும், டிபன் பாக்ஸை சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரியரையும் பணி நீக்கம் செய்திட வேண்டும். இதுபோன்ற, சம்பவங்களை தடுப்பதற்கு மாவட்ட கல்வித் துறையும் உறு தியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

;